Wednesday, 21 December 2016

All in alagu Raja



இதுக்குத்தான் ஊருக்குள்ள ஒரு ஆல் இன் ஆல் அழகுராஜா தேவைன்னு சொல்றது .... 

IMDB rocks .......... 

1. IMDB ஊழலை மலேசியாவின் high level officials விசாரித்து வந்தார்கள். அது ஒரு சாதரண body கிடையாது. High level officials-ன்னா சாதரண high level officials கிடையாது. மிக பெரிய high level officials. எல்லாமே நஜிப்பின் பதவிக்கு equal-ஆக உள்ளவர்கள்.  Peguam Negara, Bank Negara Governor,SPRM மற்றும் Ketua Polis Negara. 

2. Peguam Negara - மலேசியாவின் சட்டத்துறை தலைவர். இவர் நேரடியாக மாமன்னரின் கீழ் இயங்குபவர். இவர் எந்த ஒரு அமைச்சரவையின் கீழும் வரமாட்டார். இவர் இரு சுயேட்சை body. Majlis Yang di-Pertuan Agong-க்கு கட்டுபட்டவர். 

3. Bank Negara Governor - இவரும் ஒரு சுயேட்சை body. எந்த ஒரு அமைச்சரைவையின் அதிகாரத்துக்கும் கீழ் வரமாட்டார். Yaang Di-Pertuan Agong-க்கு கீழ இயங்குபவர். 

4. SPRM. லஞ்ச தடுப்பு ஆணையம். இவர்களும் எந்த ஒரு அமைச்சரவையின் அதிகாரத்துக்கும் கீழ் வர மாட்டார்கள். இவர்களும் ஒரு சுயேட்சை body. Yang Di-Pertuan Agong கீழ் இயங்குபவர்கள். 

மேற்குறுப்பிட்ட மூவருக்கும் Boss Agong தான். Agong தான் இம்மூவரையும் தூக்கவும் நியமிக்கவும் முடியும். அதிலும் Peguam Negaravum-வும் Bank Negara Governor-வும் பிரதமர் பதவிக்கு இணையானவர்கள். 

5. Ketua Polis Negara- இவர் மட்டும் தான் சிக்கல். இவர் சுயேட்சை body கிடையாது. இவருடைய Boss யார் என்றால் உள்துறை அமைச்சர்தான். போலிஸ் படை உள்துறை அமைச்சின் கீழ் இயங்கும். அதன் படி ஷாஹிட் ஹமிடி சொல் பேச்சு கேட்டு நடக்க வேண்டும். ஹடிமி உட்கார சொன்னால்; உடகார வேண்டும், நிற்க சொன்னால்; நிற்க வேண்டும். சொந்தமாக முடிவு எடுத்து எதுவும் செய்ய முடியாது. அதே போல் நாட்டில் மிகவும் முக்கியமாக துறையும் இதுதான். போலிஸ் படையை வைத்துக் கொண்டுதான் ஆட்டம் ஆட முடியும். போலிஸ் படை போச்சுன்னா எல்லாம் போச்சு. 

6. Peguam Negara, Bank Negara Governor, SPRM மற்றும் Ketua Polis Negara தான் IMDB வழக்கை விசாரித்து வந்தார்கள். அதுவும் மிக மிக துரிதமாக. அதுவும் மிஸ்டர் Prime Minister-ரையே கைது செய்யும் அளவுக்கு; மகாதீரின் உதவியோடு. 

7. இப்போ Peguam Negara-வை மாற்றியாகி விட்டது. கனி பட்டேலுக்கு பதில் அப்பேண்டி. இந்த புதிய சட்டத்துறை தலைவர் முன்பு ஒரு காலத்தில் UMNO Division தலைவராக இருந்தவர். UMNO-வின் வழக்கறிஞராகவும் செயல் பட்டிருக்கிறார். கனி படேலுக்கு 60 வயது; புதிய சட்டத்துறை தலைவர் அப்பேண்டிக்கு வயது 65. புதிய சட்டத்துறை மாற்றம் IMDB விசாரணையை மிகவும் Slow-ஆக்கும். கிட்டதட்ட கிடப்பில் போட்ட மாதிரி. 

8. Bank Negara Governor. முதலில் இவருக்கு நெஞ்சு வலி என்றார்கள். பிறகு Heart Attack- என்றார்கள். அப்புறம் முகைதீனின் கல்வி அமைச்சு சமப்ந்தப்பட்ட ஊழலில், விசாரணைக்காக போலிஸ் கஸ்டடியில் உள்ளார் என்றார்கள். ஆனால் கிட்ட தட்ட house arrest-ல் இருப்பது போல ஜெட்டி இருக்கிறார்கள். full watch. 

9. SPRM இவர்கள் திடிரென்று; நாங்கள் 1MDB வழக்கை விசாரிக்கவே இல்லை. SRC வழக்கைத்தான் விசாரித்து வருகிறோம் என்று ஒரு மிக பெரிய குண்டை தூக்கி போட்டார்கள். 

10. ketua Polis Negara. இவர் பாவம். இவர்கள் மத்தாளம் போன்றவர்கள். ரெண்டு பக்கமும் அடி வாங்க வேண்டும். இவர் அதிகாரத்துக்கு உட்பட்டவர். தன் Boss என்ன சொல்கிறாரோ அதை பிசிகாமல் செய்ய வேண்டும். 

11. இப்போ IMDB விசாரணையையே ஒன்றும் இல்லாமல் பண்ணி விட்டார்கள். 

12. போதாத குறைக்கு PAC விசாரணையும் நிறுத்த பட்டு விட்டது. அடுத்த நாடாளுமன்றம் கூடி; PAC-க்கு உறுப்பினர்களை தேர்ந்தெடுத்து; பிறகு அவர்கள் கூடி கணக்கை கூட்டி கழிக்க, எழுதும் போது நான் Tied-ஆகி விட்டேன். 

13. கோடி கோடியாய் திருடி விட்டு; அதை மறைக்க இவ்வளவு துணிச்சலாக எல்லாம் செய்கிறார்கள். மக்களுக்கு தெரிந்தே செய்கிறார்கள். நஜிப்பும் அவர்கள் கூட்டமும் செய்யும் அத்துனை திருட்டு தனங்களும் மக்களுக்கு இப்போ தெளிவாக புரிந்தும் தெரிந்தும் விட்டது. ஆனாலும் நஜிப் தன் பதவியை காப்பாற்றிக் கொள்ள; என்ன வேண்டுமனாலும் செய்ய அனுமதிக்கிறார்கள். 

14. ஆனால் நான் உறுதியாக நம்புகிறேன். மகாதீர் இந்த நாட்டையும் மக்களையும் காப்பாறுவார் என்று. 

15. எல்லா கட்சிகளும்; UMNO, MCA, MIC, PPP, Gerakkan மற்றும் சபா சரவாக் கட்சிகள் அனைத்தும் நஜிப்ப்பிடம் வாங்கி சாப்பிட்டுக் கொண்டு; ஜால்ரா அடித்துக் கொண்டிருக்கிறார்கள். நாஜிப் செய்யும் அனைத்து குற்றங்களுக்கும் துணை போகிறார்கள். இது ரொம்ப நாள் நீடிக்காது. கடவுள் இவர்களை தண்டிக்காவிட்டாலும் மக்கள் கண்டிப்பாக தண்டிப்பார்கள். 

16. இதற்குதான் ஊருக்குள்ள ஒரு ஆல் இன் ஆல் மகாதீர் தேவைன்னு சொல்றது. தனி ஆளா நின்று போர் தொடுத்துக் கொண்டிருக்கிறார். அவர் நியாயத்தின் பக்கம் இருப்பதால் நிச்சயம் ஜெயிப்பார். 

Share this


0 Comments

About Me

My photo
Novelist, Independent Film Maker

Contact form

Name

Email *

Message *

Total Pageviews