Friday, 23 December 2016

மலேசியாவும் டாக்சியும் 4

3-ன் தொடர்ச்சி. 

# நஜிப் பிரதமராக பதவி ஏற்றவுடன் அதிரடியாக சில அறிவிப்புகளை வெளியிட்டார்.  
1. இனி டாக்சி கம்பெனிகளுக்கு டாக்சி பெர்மிட் கொடுப்பது இல்லை. 
2. தனி நபர்களுக்கு மட்டும் தான் இனி டாக்சி பெர்மிட்.  
3. எல்லா டாக்சி டிரைவர்களும் உடனடியாக டாக்சி பெரிமிட்களுக்கு விண்ணப்பிக்கும் படி கேட்டுக் கொண்டார். 

# இது ஒரு வழக்கமான அரசியல்வாதி பேச்சுத்தான். சும்மா அடிச்சு பொறிச்சு விடுகிறார். எங்கே அமல்படுத்த போகிறார் என்று பெரும்பாலும் டாக்சி டிரைவர்கள் அப்ளை செய்யாமல் அசால்ட்டாக இருந்துவிட்டர்கள். வெகு சில டாக்சி டிரைவர்கள் மட்டும் அப்ளை செய்தார்கள். 

# ஆனால் அதிரடியாக; அப்ளை செய்த அத்துனை பேருக்கும், ஒருவர் பாக்கி இல்லாமல் பராபட்சம் இன்றி டாக்சி பெர்மிட்கள் வழங்கப்பட்டது. இதில் நிறைய டாக்சி ஓட்டாத PSV Lisence வைத்திருந்து; டாக்சி ஓட்டாதவர்களுக்கும் பெர்மிட்கள் வழங்கப்பட்டது. 

# பெர்மிட் வாங்கிய டாக்சி டிரைவர்கள் முகத்தில் எல்லாம் கோல்ட் சிரிப்பு. டாக்சி பெர்மிட்களுக்கு அப்ளை செய்யாத டாக்சி டிரைவர்கள் காதில்; டாம் அண்ட் ஜெர்ரி கார்டூனில் வருவது போல இரு காதுகளிலும் புகை அடித்தது. 

# உடனே அவசர அவசரமாக மற்றவர்களும் டாக்சி பெர்மிட்களுக்கு அப்ளை செய்தார்கள். அதில் கால்வாசி பேருக்கு கிடைத்தது. முக்கால்வாசி பேருக்கு கிடைக்கவில்லை. 

# டாக்சி டிரைவர் வாழ்கையில் ஏதோ ஒரு மூலையில் சிறிது வெளிச்சம் பட தொடங்கியது. எல்லோரும் கொஞ்சம் நிமிர்ந்து உட்கார முற்படும் போது. நஜிப் வைத்தார் ஒரு பெரிய ஆப்பு. 

# அராப் நாடு ஒன்றுக்கு 1000 Proton Exora MPV கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது. அத்துனை கார்களும் QC-யில் ரிஜெக்ட் ஆகி திரும்பி அனுப்பட்டது. 

# நம்ம சூரப்புலி நஜிப் அரசாங்கம் ரிஜெக்ட் ஆன 1000 Proton Exora MPV கார்களையும் அதே கோல்ட் கலரில் மேலே ஒரு தொப்பியை மாட்டி TEKS1M (TEKSI 1MALAYSIA) ஆக்கிவிட்டார்கள். ஏறி ஆமர்ந்ததும் RM 4. பிறகு ஒவ்வொரு 150 மீட்டருக்கும் 30 காசு வீதம் புதிய மீட்டரை அறிமுகப்படுத்தினார்கள். இந்த TEKS1M டாக்சிகள் 30 சதவிதம் Budget Taxi-அய் விட அதிகம். 

# இந்த TEKS1M அறிமுகம் என்பது சிக்கல் சிதம்பரமாகி குழப்பத்தின் உச்சம் ஆனது. ஆரம்பத்தில் இந்த TEKS1M டாக்சிகள் தனி நபர்களுக்கு மட்டும் தான் வழங்கப்படும் என்று சொல்லப்பட்டது. 

# இந்த TEKS1M-களுக்கு BSN வங்கி மூலம் கடன் கொடுக்கப்பட்டு மாதம் 700 ரிங்கிட் ஏழு வருடங்களுக்கு செலுத்தினால் போதும் என்று அரசாங்கத்தால் கூறப்பட்டது. சுமார் 500 TEKS1M டாக்சிகள் தனி நபர்களுக்கு வழங்கப்பட்டது. மீதம் உள்ள TEKS1M-க்கள் டாக்சி கம்பெனிகளுக்கு கொடுக்கப்பட்டது. 

# வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டு, தனி நபர்களுக்கு டாக்சி பெர்மிட்கள் வழங்கபடுவது நிறுத்தப்பட்டு, மீண்டும் டாக்சி கம்பெனிகளுக்கு மட்டும் பெர்மிட்க்கள் கொடுக்கப்பட்டது. தனி நபர்களுக்கு application form-கூட தராமல் நிறுத்தப்பட்டது. SPAD-இல் கேட்டால் ‘Arahan Kerajaan’ என்கிறார்கள். இந்த TEKS1M-க்கு பின்னனியில் நஜிப்பின் மனைவி டத்தின் ரோஸ்மா இருப்பதாக கூறப்படுகிறது. 

# இப்போது புதிதாக அரசாங்க கொள்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் எல்லா வித டாக்சிகளும் நிறுத்தப்பட்டு TEKS1M-க்கள் மட்டும் தான் சேவையில் இருக்கும் என்பது அரசாஅங்கத்தின் தற்போதைய கிறுக்குதனம். 

# Proton Exora கார்களின் தயாரிப்பு நிறுத்தப்பட்டதால்; Proton Exora-வுக்கு பதிலாக TEKS1M-களுக்கு Toyota Innova கார்கள் கன்ந்தி(Ganti)செய்யப்பட்டது. இதில் வேடிக்கை என்னவென்றால்; ஏற்கனவே இந்த Toyota Innova MPV மோடல் கார் Taxi Executive(Blue Cab)- ஆக ஓடிக் கொண்டிருக்கிறது. 

# ஒரே சமத்தில் Toyota Innova MPV Taxi Executive-வாகவும் Special Budget Taxi-யாகவும் டவுனில் ஓடிக் கொண்டிருக்கிறது. 

# கோல்ட் கலர் TEKS1M Toyota Innova ஏறினால் ஆரம்ப மீட்டர் RM4.00 பிறகு ஒவ்வொரு 150 மீட்டருக்கும் 30 காசு; அதே Toyota Innova நீல கலர் Taxi Executive ஏறினால் டபுள் சார்ச்(Double charge) ஆரம்ப மீட்டர் RM 6.00 பிறகு ஒவ்வொரு 150 மீட்டருக்கும் 50 காசு. 

# எழுதும் நானே கொஞ்சம் குழம்பி போனேன். படிக்கும் நீங்கள் இதை குழம்பிக் கொள்ளாமல் படித்தால் சரித்தான். என் கேள்வி; ஒரே வித மோடல் கார்(Toyota Innova)-க்கு ஏன் இரு வேறு விலை மீட்டர். இதனால் டாக்சி டிரைவர்களுக்கு பாதிப்பும்; பயணிகளுக்கு குழப்பமும் இருக்காதா……? இந்த Grab Car, Uber என்கிறார்களே அப்படி என்றால் என்ன ….? அடுத்த கட்டுரையில் விரிவாக பார்ப்போம். 

Share this


0 Comments

About Me

My photo
Novelist, Independent Film Maker

Contact form

Name

Email *

Message *

Total Pageviews