Friday, 23 December 2016

மலேசியாவும் டாக்சியும் 3

தொடர்ச்சி ......

# பலவித குழப்பபங்களுக்கும் கூச்சல்களுக்கும் நடுவில் வளர்ந்து வந்த டாக்சி சேவை Taxi Executive வருகையால் Budget Taxi சில பாதிப்புகளை எதிர்நோக்கியது.

# எல்லா ஹோட்டல்களிலும் Taxi Executive சேவை வழங்கும் விதமாக, Hotel Lobby-யிலே இடம் ஒதுக்கப்பட்டு; Taxi Executive-க்கள் எல்ல ஹோட்டல்களையும் ஆக்கிரமித்து கொண்டன. Budget Taxi-கள் விரட்டியடிக்க பட்டன.

# Tourist-க்கள் தான் டாக்சி டிரைவர்களுக்கு பெரிய வருமானம். Sightseeing, Melaka Tou, Genting Tour இன்னும் பலவித Tour-கள் டாக்சி டிரைவர்களுக்கு நல்ல வருமானத்தை ஈட்டி கொடுக்கும். போனஸாக Chocolate Factory, Pewter Factory, Batik Factory, Watch Factory என்று கமிஷன்கள் கிடைக்கும் இடங்களும் உண்டு. Chocolate Factory-க்கு அழைத்து செல்லும் சுற்று பயணிகள் வாங்கும் சாக்லெட்டின் விலையிலிருந்து 40% கமிசஷன்கள் டாக்சி டிரைவருக்கு கிடைக்கும். 100 வெள்ளிக்கு சாக்லெட் வாங்கினால் 40 வெள்ளி கமிஷனாக கிடைக்கும். அதே போல் பிற Factory-களிலும் கமிஷன்கள் கிடைக்கும். இந்த சுற்று பயணிகளை நம்பி அதிகமான டாக்சி டிரைவர்கள் இருப்பார்கள். இந்த டாக்சி டிரைவர்கள் பிற பகுதிகளில் ஓட மாட்டார்கள்.

# டாக்சிகள் பல பகுதிகளில் பிரிந்து ஓடும். டாக்சிகளுக்கு demand இருக்கும். Taxi Executive-க்கள் ஹோட்டல் பகுதிகளையும் சுற்று பயணிகளையும் ஆக்கிரமித்துக் கொண்டதால், Budget Taxi தெருவுக்கு வந்தது. அதாவது பிற பகுதிகளில் ஓட ஆரம்பித்தார்கள். பிற பகுதிகளில் ஓடிக் கொண்டிருந்த டாக்சிகள் எண்ணிக்கை அதிகரித்தது. வருமானம் பாதியாக குறந்தது. Taxi Budget-க்கும் Taxi Premier-க்கும் முட்டல் மோதல் தொடங்கியது.

# இதற்கிடையில் படாவி போய் நஜிப் வந்தார். நஜிப் பதவி ஏற்ற அந்த காலகட்டம் டாக்சி டிரைவர்களின் பொன்னான கால கட்டம் என்றுத்தான் சொல்ல வேண்டும். ஆனால் 2013 பொது தேர்தலுக்கு பின் தன் வாக்குறுதிகளை காற்றில் பறக்க விட்டு, டாக்சி டிரைவர்களை சாகடித்து; Sector Teksi முழுவதையும் collapse ஆக்கினார். 50 வெள்ளையைக் கூட வீட்டுக்கு சம்பளமாக எடுத்து செல்ல முடியாத சூழ்நிலையை உறுவாக்கியதுதான் நஜிப்பின் உலக மகா சாதனை.
தொடரும் .......

Share this


0 Comments

About Me

My photo
Novelist, Independent Film Maker

Contact form

Name

Email *

Message *

Total Pageviews