பிளாஷ்பேக் #2
# கணிதமும் அறிவியல் பாடமும் ஆங்கிலத்தில் போதிக்க வேண்டும் என அப்போதைய மகாதீர் அரசாங்கம் ஒரு திட்டத்தை கொண்டு வந்தது. அய்யோ …. ஆத்தா … அம்மா …. கடவுளே … கதறி துடித்து எழுந்தார்கள் நம் சமூதாயத்தின் மீது பற்றுள்ள போராட்டவாதிகளும் நம் தமிழ்ப்பள்ளிகளை கட்டி காக்கும் காவலர்களும்.
# 2002-ம் ஆண்டு சாமிவேலு தலைமையில் PWTC- மாநாட்டு மையத்தில் தமிழ்ப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மாநாடு ஒன்றை நடத்தினார் சாமிவேலு. செம்பருத்தி பசுபதி ஒத்தை ஆளாக நின்றுக் கொண்டு; மாநாட்டில் கலந்து கொண்ட தலைமை ஆசிரியர்களுக்கு பிரச்சார நோட்டிஸ் கொடுத்து கொண்டிருந்தார் பசுபதி.
# ஆரம்ப கல்வியை தாய் மொழியில் தான் கற்றல் கற்பித்தல் இருக்க வேண்டும் என பசுபதியும் ஆறுமுகமும் ஐநா சபை வரை போய் ஆராய்ச்சி செய்து வந்து இங்கு பெரும் எதிர்ப்பு கொடுத்தார்கள்.
# எனக்கு இன்னும் நினைவில் இருக்கு; செம்பருத்தி சார்ப்பில் டி.எச்.ஆரில் ஸ்லோட் வாங்கி பசுபதி, ஏன் கணிதம் மற்றும் அறிவியல் பாட்த்தை ஆங்கில மொழியில் போதிக்கூடாது என்று மக்களுக்கு விளக்கினார்கள். பார்லிமெண்ட் போய்; அமைச்சரிடம் Blue Print எல்லாம் கொடுத்தார்கள்.
# Dong Zong, United ALUMNI of Chinese School Asso, போன்ற சீன அமைப்புகளோடும் இன்னும் பிற மலாய் அமைப்புகளோடும் இணைந்து போராடினார்கள். சீனப்பள்ளி DLP-எனும் கணிதம் மற்றும் அறிவியல் பாட திட்டத்தை முற்றாக நிராகரித்துள்ளது. சீனப்பள்ளிகளில் இந்த இரட்டைப்பாட திட்டம் இல்லை. Only மலாய் மற்றும் தமிழ்ப்பள்ளிகளில் மட்டுமே.
# அந்த கால கட்டத்தில் தமிழ் அறவாரிம் இருந்ததா இல்லையா என்று எனக்கு சரியாக ஞாபகத்தில் இல்லை. ஆனால் பசுபதி, சண்முக சிவா, ஆறுமுகம் மற்றும்; இன்று தமிழ் அறவாரியம், EWRF, மை ஸ்கில் போன்ற அமைப்பில் உள்ளவர்கள் அன்று PPSMI எனப்படும் கணிதம் மற்றும் அறிவியல் பாடத்தை ஆங்கில மொழியில் கற்றல் கற்பித்தல் எனும் இத்திட்டதை பேய் பிடித்தது போல் எதிர்த்தார்கள்.
# அன்று அவ்வளவு கடுமையாக இதை எதிர்த்த ஜாம்புவான்களின் யாருடைய முகமும் இன்று வெளியில் தெரியவில்லை. தமிழ் அறவாரியம் கூட ஒப்புக்கு சப்பாக ஒரு அறிக்கை கொடுத்தார்கள். அவ்வளவுதான். தமிழ் அறவாரியத்தை ஒரு தேசிய இயக்கமாக எல்லோருக்கும் காட்டியது தமிழ்ப்பள்ளிகளின் போராட்டம்தான். அந்த fire இப்போது இல்லை.
# மகாதீர் இந்திட்டத்தை கொண்டு வந்த போது தெருவில் வந்து போராடினார்கள். கொடி பிடித்தார்கள். காது வலிக்கும் அளவுக்கு கூச்சல் போட்டார்கள். ஆனால் இன்று வாய் மூடி மௌனம் காப்பது ஏன்…? எதற்காக …? யாருக்காக ….?
# கணிதம் மற்றும் அறிவியல் பாடத்தை ஆங்கில மொழியில் கற்பித்தால் தரமான தமிழ்ப்பள்ளி மாணவனை உருவாக்க முடியாது. தமிழ்ப்பள்ளிகள் பெரும் சவால்களை எதிர் நோக்கும், தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களின் நிலை கேள்வி குறியாகும் என்று முழங்கினார்கள். இப்போது அத்துனை வாயிலும் பிளாஸ்ட்ரி போட்டு ஒட்டப்பட்டுள்ளது மிக ஆச்சர்யம். So …. மகாதீர் என்ன திட்டம் கொண்டு வந்தாலும் அதை எதிர்க்க வேண்டும். அதே திட்டத்தை பிறர் கொண்டு வந்தால் சம்மதம். அப்படிதானே.
# என் மனதில் ஒரு எண்ணம் உண்டு. மகாதீர் காலத்தில் PPSMI திட்டத்தை கடுமையாக எதிர்த்த பசுபதி எண்ட் கோ; ஏதோ ஒரு வகையில் இன்றைய ஆளும் பாரிசானோடு ஒத்து போகிறார்கள். நூல் பிடித்து போனால் கமலநாதன் அவர் பிண்ணனி; என் எஸ் ராஜேந்திரன் அவர் பிண்ணனி எல்லோரும் ஒரு நுனியில் வந்து நிற்கிறார்கள். எங்கோ; எப்படியோ; எதோ ஒரு வகையில் எல்லோரும் ஒரே கோட்டில் வந்து நிற்கிறார்கள்.
Open-னா சொல்லனும்னா ….. ஜி … இன்னுமா இந்த ஊர் நம்மல நம்புது …...
0 Comments