பிளாஷ்பேக் 1#
# 2001-2002-ம் ஆண்டுகளில் SRK/SRJK பள்ளிகளில் கணிதம் மற்றும் அறிவியல் பாடத்தை ஆங்கில மொழியில் போதிக்கும் திட்டத்தை அன்றைய மகாதீர் அரசு கொண்டு வந்தது. அது திட்டம் என்பதைவிட ஆணை என்றே சொல்லலாம். நாடு முழுவதும்; எல்லா இனமும் இதை கடுமையாக எதிர்த்தது. நம் இந்திய சமூகமும் இதை கடுமையாக எதிர்த்தது.
# உடனடியாக சாமிவேலு அனைத்து தமிழ்ப்பள்ளி தலைமை ஆசிரியர்களையும் அழைத்து PWTC-இல் ஒரு கூட்டம் போட்டார். கூட்டம் என்பதைவிட மகாதீர் அரசுக்கு ஆதரவாக கூவினார் என்றே சொல்லலாம்.
# ஊரே ரெண்டு பட்டு போனது. எதையும் காதில் போட்டுக் கொள்ளவில்லை. 2003-ம் ஆண்டு ஜோராக ஆங்கிலத்தில் கணிதம் மற்றும் அறிவியல் பாடத்தை போதிக்கும் திட்டத்தை அமல் படுத்தினார்கள். PPSMI- அறிவியல் மற்றும் கணிதம் பாடத்தை ஆங்கில மொழியில் கற்றல் மற்றும் கற்பித்தல்.
# 2009-2012 ஆண்டுகள் காலகட்டத்தில் இந்த PPSMI அப்போதைய கல்வி அமைச்சர் முகைதீன் யாசினால் ரத்து செய்யப்பட்டது. உலக ரீதியில் நம் நாட்டின் கல்வி தரம் வீழ்ச்சி அடைந்ததற்கு PPSMI ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. இதோடு இன்னும் சில காரணங்களும் சேர்ந்து கொள்ள PPSMI ரத்து செய்யப்பட்டது.
# இதோடு விட்டது சனியன் என்றுதான் எல்லோரும் நிம்மதியாக இருந்தார்கள். ஆனால் மூன்றாம் இடத்தில் அமரும் சனி ஏழரை ஆச்சே. அது கமலநாதன் மற்றும் என் எஸ் ராஜேந்திரன் வடிவில் வந்தது. சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தானாம் ஆண்டி என்பது போல; SK பள்ளிகளுக்கு கொண்டு வந்த DLP எனும் திட்டத்தை தமிழ்ப்பள்ளிகளில் கொண்டு வந்து திணித்தார்கள்.
# கணிதம் மற்றும் அறிவியல் பாடத்தை ஆங்கில மொழியில் போதித்தல் என்பது வரபிரசாதம், அஸ்திரேலியாவின் ஆப்பிள், அமேரிக்காவின் திராட்சை என கூவிய சாமிவேலுவிடம் இப்போது கேட்டால் அவர் என்ன சொல்வார் தெரியுமா….? என்னை கூவ சொன்னார்கள் நான் கூவினேன். அந்த திட்டம் failure ஆகும் என்று எனக்கு எப்படி தெரியும்? நானா அந்த திட்டத்தை வரைந்தேன். இல்லை எனக்கு அது பற்றி ஏதாவது தெரியுமா …? உங்களை யார்யா என்னை நம்ப சொன்னது என்று நம்மை திருப்பி கேட்பார்.
# இப்படித்தான் இந்த கமலநாதனும் என் எஸ் ராஜேந்திரனும். யார் இவர்கள்? அதுவும் என் எஸ் ராஜேந்திரன் என்பவர் யார்? அவர் ஒரு சாதரண அரசாங்க ஊழியர். அரசு ஒதுக்கிய மாபெரும் நிதியை பிரித்து கொடுக்கும் ஒரு கணக்கு பிள்ளை. இவர் என்ன ADUN-ன்னா இல்லை MP-யா ….? வாக்குறுதி கொடுக்க. கமலநாதனுக்கு தமிழ் படிக்க தெரியுமா இல்லையா என்று தெரியாது. தமிழ் பள்ளியில் படித்தவரா என்றும் தெரியாது. சாமிவேலு கொடுத்த வாக்குறுதியே நாசமாய் போனது … இவர்கள் வாக்குறுதியை தூக்கி குப்பையில் தான் போட வேண்டும். உச்சனை உச்சன் பார்க்க அரசனும் ஆண்டி ஆவான். நாதனை ராஜேந்திரன் பார்க்க நம் தமிழ்ப்பள்ளிகள் நாசமாய் போக வேண்டியதுதான்.

# ராகு கேது என்கிற அசுப கிரங்களில் மாட்டிக் கொண்ட கால சர்ப்ப தோசம் போல்; இந்த கோளாறுகளின் கைகளில் மாட்டிக் கொண்டு நாம் படும் அவஸ்தை இருக்கே; இனி ராகு காலத்தில் அம்மன் கோவிலில் போய் பால் ஊற்ற வேண்டியதுதான்.
# நீசனை நீசன் பார்க்க ராஜயோகமும் சித்தியாகும். இன்னும் 15 மாதங்கள் மட்டுமே அடுத்த பொது தேர்தலுக்கு டைம் இருக்கு. என்ன நீச காரியங்கள் வேண்டுமானாலும் செய்யுங்கள். ராஜயோக பதவியை யாருக்கு கொடுப்பது என நாங்கள் முடிவு செய்து கொள்கிறோம்.
0 Comments