Saturday, 18 November 2023

நான் என்னை காப்பாற்றிக் கொள்ள 1975-ஆம் ஆண்டுக்கு போகிறேன்.

நான் என்னை காப்பாற்றிக் கொள்ள 1975-ஆம் ஆண்டுக்கு போகிறேன்.

1. என் பெயர் மதியழகன். நான் கால பயணித்தின்(Time Travelling) மூலம் 2040-யிலிருந்து திரும்பி வந்திருக்கிறேன். என் டிரவல் மிஷினில் ஏற்பட்ட சிறு கோளாறு காரணமாக என்னால் திரும்பி, நான் தற்போது வாழ்ந்துக் கொண்டிருக்கும் 2040 ஆண்டுக்கு போக முடியாமல் 2018-யில் சிக்கிக் கொண்டேன். இப்போதுதான் என் டைம் டிரவல் இயத்திரத்தை சரி செய்து முடித்தேன்.

2. 2040-ஆண்டில் எனக்கு வயது 65. நான் என் 65-வது வயதிலிருந்து திரும்பி என் கடந்த காலமான 43-வது வயதுக்கு வந்திருக்கிறேன். 2018-2040 வரை 22 வருடங்கள் நான் வாழ்ந்த வாழ்கையை கடந்து, மீண்டும் 2018-க்கு வந்திருக்கிறேன்.

3. எதிர்கால(கடந்த) உலகின் மாற்றம், மகிழ்ச்சி, துக்கம், துயரம், சண்டை(போர்), துரோகம், சூழ்ச்சி பலவற்றை பார்த்து வந்திருக்கிறேன்.

4. 2040-இல் முகநூல் காலாவதியாகி விட்டது. ஆனால் வேறொரு தளம் உருவாகி இதே போல் வாய்க்கால் வரப்பு தகறாருகளும், ரத்தபூமியுமாக சண்டை போட்டு கொண்டே இருக்கிறார்கள். சண்டை முற்றி தோல்வி அடைந்தவர்கள் BLOCK செய்துவிட்டு ஓடிவிடுவார்கள். பிறகு அவர்களை கண்டுபிடிக்கவே முடியாது.

5. வாட்சாப் இல்லை. ஆனால் வாட்சாப் போன்று வேறு ஒரு வஸ்து உண்டு. போன் நம்பர் எல்லாம் கிடையாது. ஒன்லி ஐடிதான். அதன் மூலம் நீங்கள் வீடியோ கால் செய்யலாம். ஒருவரின் உருவத்தை எதிரே கொண்டு வரலாம். இன்று நேற்று நாளை படத்தில் ஆர்யா பேசுவது போல். உலகம் முழுக்க இண்டர்நெட் ஃப்ரி. எல்லாம் Unlimited data-தான். டாப் ஆப் செலவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

6. அங்கேயும் ஆயா வடை சுட்ட கதைகளை இன்னும் ஃபார்வார்ட் மெஜேச்-ஆக அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். கூட் மார்னிங் மெஜேஜ்-களை பில்டர் செய்து விடுவார்கள். தேவை பட்டால் மட்டுமே நீங்கள் பார்க்க முடியும்.

7. கடாரம் பிடித்தான் ராஜ சோழன் என்று இன்றும் பெருமையோடு பேசி திரிந்துக் கொண்டிருக்கிறார்கள். மரத்துக்கு சேலை, அப்புறம் அதுக்கு ஒரு விளக்கு போட்டு, அவ்வழியே வந்த ஒருவருக்கு நம்பர் அடித்ததால் கூடாரம் கட்டி, கோவில் நிருவாகம் உருவாகி, பின்னார் பல கோஷ்டியாக உடைந்து போன 248 வருட கோவில் உடைப்பை எதிர்த்து பெரும் போராட்டம் எல்லாம் நடக்கிறது.

8. பட்டை தண்ணி போயி, சப்டை போத்தல் போயி புது பீர் வந்து விட்டது. நம்ம தமிழ் மக்கள் சாலையோரத்தில், ஆரோக்கிய விளையாட்டு மைதானம்(Taman Rekreasi)-யில் சட்டையெல்லாம் கழட்டி போட்டுவிட்டு, கார் ஸ்பீக்கரில் தமிழ்பாட்டை வேகமாக வைத்துக் கொண்டு தண்ணி அடித்துக் கொண்டிருக்கிறார்கள். போலிஸ்-சும் இவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது இல்லை.

9. 2040-இல் 124 தமிழ்ப்பள்ளிகள் மட்டுமே உள்ளது. நம் தமிழ் குடும்பத்து குழந்தைகள் பெரும்பாலும் மலாய் மற்றும் சீனப்பள்ளிகளில்தான் படிக்கிறார்கள். மலாய் மற்றும் சீனப்பள்ளிக்கு பெரும்பாலான தமிழ் குடும்பத்து குழந்தைகள் செல்வதால், நம் நாட்டில் தமிழ்ப்பள்ளிகள் வேண்டுமா என்று அரசாங்கம் கேள்வி எழுப்புகிறது. தமிழ்ப்பள்ளிகளை மூடிவிட்டு மலாய் மற்றும் சீனப்பள்ளிகளாக மாற்றம் வேண்டும் என அரசாங்கம் தொடர்ந்து நம்மை சீண்டுவதாக நம் நாட்டில் உள்ள NGO-க்கள் ரத்தம் கொதிக்க தெருக்களில் நின்று சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

10. வீட்டுக்கு ஒரு NGO வந்துவிட்டது. லட்ச கணக்கான NGO தலைவர்கள் நம்மிடம் உண்டு. ஆண்டுக்கு 365 தமிழ்க்கல்வி மாநாடு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு மாநாட்டிலும் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. தமிழ்ப்பள்ளிகளையும் தமிழ்க்கல்வியையும் பாதுகாக்க தொடர்ந்து போராடி வருகிறார்கள். 

11. . சிறு NGO, பெரு NGO என இரன்டு பிரிவுகளாக NGO-கல் பிரித்து வைக்கப்பட்டுள்ளது. இதில் பெரு NGO-கள் நன்றாக காக்கா பிடிக்க தெரிந்தவர்கள் என்பதால், யார் ஆட்சிக்கு வந்தாலும் கூஜா தூக்கி, கால்கள் கழுவி, சப்பாத்திக்கு கையிறு கட்டி விட்டு நல்ல சுகமாக வாழ்கிறார்கள். வெட்கமே இல்லாமல் எப்படி அரசியல்வாதிகள் கால்களில் விழுவது என நாடு முழுவதும் பல பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

12. யார் அதிகமான கால்களை கழுவி விடுகிறார்களோ அவர்களுக்கு கூடுதல் பதவி, நல்ல கமிஷன் கொடுக்கப்படுகிறது.

13. 2036-ஆம் ஆண்டு நடந்த நாட்டின் 18-வது பொது தேர்தலில் கைரி தலைமையிலான கூட்டணி தோல்வி அடைந்தது. புதிய கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி செய்து வருகிறது. இந்த ஆண்டு(2040)-இல் நாட்டின் 19-வது பொது தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு பிறகு மீண்டும் நமக்கு நான்கு முழு அமைச்சர் பதவி கிடைக்குமா என்று எல்லோரும் எதிர்ப்பார்த்துக் கொண்டிருகிறார்கள்.

14. தமிழ் போராளிகள் வாய்ப்பு கிடைக்கும் இடத்தில் சாய்ந்துக் கொள்ள நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இங்கிருந்து அங்கும், அங்கிருந்து இங்கும் தாவிக் கொண்டிருப்பதற்கு ஏதுவாக கொரில்லா பயிற்சிகள் கொடுக்கப்படுகிறது. ஆளும்கட்சி எதிர்கட்சி என எந்த பேதமும் இன்றி வாய்ப்புகளை தட்டிக் கொள்ள மரத்துக்கு மரம் தாவி குரங்கு வித்தை காட்டி கொண்டிருக்கிறார்கள்.

15. யார் எதிர்கட்சி, யார் ஆளும் கட்சி என தெரியாத அளவுக்கு எங்கும் ஒரே முகம். இங்கிருந்தவர்கள் அங்கே. அங்கிருந்தவர்கள் இங்கே. இந்தியர்களை பிரதிநிக்கும் ஒரே கட்சி ஐபிஃப் என கைரி புகழ்ததற்கு, மலேசிய தமிழர் கட்சி பெரும் ஆட்சேபனை தெரிவித்தது. மஇகா NGO-ஆக மாறிவிட்டது. டிஏபி முழுவதுமாக சீனர்கள் கட்சியாக மாறி, சம்பிரதாயமாக ஒரு சீக்கியர், ஒரு தமிழர், ஒரு தெலுங்கர், ஒரு மலையாளியை வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

16. பி.கே.ஆர் பல பிரிவுகளாக பிரிந்து போய் விட்டார்கள். அன்வார் நினைவாக ஒரு தனி அணி இன்னும் போராடி வருகிறது. அங்கிருந்த இந்தியர்கள் தனி தனி குழுக்களாக சிதறி போய் அங்காங்கு ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

17. மலாய்காரர்கள் மேலும் ஒற்றுமையாக மிகவும் வேகமாக வளர்ந்து வந்து விட்டார்கள். உயர்ந்த சமூகமாக மலாய் சமூகத்தை உலக மக்கள் பார்க்க தொடங்கி விட்டார்கள். மலாய்காரர்களின் ஒற்றுமையையும் வளர்ச்சியையும் பெருமிதமாக பார்க்கும் உலக மக்கள்; அவர்களை சிறந்த ரோல் மாடல்களாக எடுத்துக் கொள்கிறார்கள்.

18. மகாதீர் தொடங்கிய பெர்சத்து, மாட் சாபுவின் அமானா, கைரி தலைமையிலான கட்சி, அஸ்மின் தலைமையிலான பி.கே.ஆர் ஆகியவை மலாய்காரர்களின் முக்கிய கட்சியாக விளைங்கி வருகிறது.

19. டிவி திறந்தால் நமக்கு நிறைய ஆப்ஸ்கள்(Apps) வந்து விட்டது. எதை பார்ப்பது என்று நமக்கு ஒரே கன்பியூஸ். நிமிடத்துக்கு ஒரு ஆப்ஸ் மாற்றிக் கொண்டே இருக்க வேண்டிய ஜாலித்தான் நமக்கு. கடைசியில் எதையும் பார்க்க மூட் இல்லாமல் டிவியை மூடிவிட வேண்டியதுதான். புது படங்கள் ரிலிஸ்-க்கு என்றே தனி ஆப்ஸ் வந்துவிட்டது. ரேடியோக்கள் கூட ஆப்ஸ்-யில் மட்டும்தான் கேட்க முடியும் என்றாகி விட்டது.

20. கடந்த மாதத்தில்  விண்அழைகான்செல்(2040-இல் தமிழ் கலைசொல்) என்று அழைக்கப்படும்  செட்லைட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாடே செயல் இழந்துவிட்டது. இந்த கண்றாவிக்குதான் இணையத்தை நம்பாதீங்கன்னு கத்திகிட்டு இருந்தோம் கேட்டிங்களா என்று சமூக ஆர்வலர்கள் கத்தி கதறிக் கொண்டிருந்தார்கள். 

21. எல்லையற்ற தொடர்பில் உலகம் இயங்கி வந்தது. அனைத்தும் இணையம்தான். உலகமே கம்பியில்லா இணையத்தோடு இணைக்கப்பட்டிருநத்து. டிவி, ரேடியோ, வங்கி, அரசாங்க/தனியார் துறைகள், கல்வி கூடங்கள் அனைத்தும் இணையம் வழி சேவைத்தான். இணையம் அணைந்ததால் எல்லாம் அணைந்தது. ஒரு வாய் சாப்பாட்டுகே மக்கள் தவித்து போய் விட்டார்கள்.

22. Cash less என்று சொல்லி போனில் பார் கோட் கொண்டு வந்து, நீங்கள் எந்த பொருள் வாங்கினாலும் போனில் உள்ள பார் கோட் மூலமாக ஸ்கேன் செய்து பணத்தை செலுத்தி வாங்கி விடலாம். போன் இல்லாமல் மார்கெட் போய் கத்திரிகாய் கூட வாங்க முடியாது. இதனால் பொது மக்களுக்கு நன்மை என்றாலும்; தீமையே அதிகமாக இருகிறது. பொது தேர்தலுக்கு பிறகு நோட் ரிங்கிட் மீண்டும் வரும் என எதிர்ப்பார்க்கபடுகிறது.

23. பிபிஆர் பிளட்டுகள் திட்டம் மீண்டும் புதுபிக்கக்கூடாது என மக்கள் ஆர்ப்பாட்டம் செய்துக் கொண்டிருகிறார்கள். இதில் பெரும்பாலும் பாதிக்கப்படுவது இந்திய குடும்பங்கள்தான். எஸ்டேட் போய் கம்பம் வந்தது. எஸ்டேட் தமிழன்-கம்பத்து தமிழன். கம்பம் போய் பிபிஆர்  வந்தது. இப்போ பிபிஆர் தமிழன். 

24. சீனர்களும் மலாய்கார்கள் போன்று நமக்கும் தரைவீடுகள் கட்டி தரவேண்டும் என அரசியல் தலைவர்கள் குரல் எழுப்பி வருகிறார்கள். இன்னும் 3 மூன்று லட்சம் பிபிஆர் தமிழர்கள் நீல ஐசி இல்லாமல் இருப்பதாக எதிர்கட்சி தலைவர் கூறி வருகிறார். இந்த ஆண்டு நடக்கும் 19-வது பொது தேர்தலுக்கு பிறகு இப்படி பேசியதை எல்லோரும் மறந்து விடுவார்கள். அடுத்த தேர்தலுக்கு மீண்டும் வாய் திறப்பார்கள்.

25. ஜாதிகள் இல்லை என்று சொல்லிக் கொண்டும், ஜாதிகளுக்கு எதிர்ப்பு என்று சொல்லிக் கொண்டே சிலர் தனியொரு ஜாதி எழுத்தாளர்கள் குழுவாக இயங்கிக் கொண்டிருகிறார்கள். நவீன இலக்கியம் என சொல்லிக் கொண்டு ஜாதியின் முகமாக இடையினம் குழு இயங்கி வருகிறது.

26. மலேசிய சினிமா நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும் இந்திய தமிழ் சினிமாவுக்கு இணையாக நல்ல நல்ல கதைகளோடு மலேசிய தமிழ் சினிமா வெற்றி பெற்ற ஒரு வியாபார சந்தையாக உருவாகி உள்ளது. நிறைய இளைஞர்கள் நம்பிகையோடு சினிமாவுக்குள் வருகிறார்கள்.

27. ஆர்.டி.எம், ஆஸ்ட்ரோ முகத்தை வைத்துக் கொண்டு சினிமாவை சீரழித்தவர்கள் எல்லோரும் காணாமல் போய்விட்டார்கள். புது புது இளைஞர் மலேசிய தமிழ் சினிமாவில் கலக்கிக் கொண்டிருகிறார்கள். நானும், இன்னும் சில நண்பர்களும் இணைந்துக் சினிமா கல்லூரி ஒன்று தொடங்கியுள்ளோம். எங்கள் சினிமா கல்லூரியில் படித்தவர்கள் கொரியாவில் போய் சினிமா எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

28. 2040-யில் நான் பெரிய எழுத்தாளனாக உள்ளேன். சினிமா ஜாம்புவானாக உள்ளேன். நான் உருவாக்கும் மலேசிய தமிழ் இளைஞர் கொரியா வரை போய் கலக்குவதை பொறுத்து கொள்ள முடியாத என் எதிரிகள் என்னை முடித்து கட்ட பார்க்கிறார்கள். டைம் டிரவல் மூலம் 1975-ஆம் ஆண்டுக்கு போய் நான் பிறக்காமல் செய்துவிட நினைக்கிறார்கள். 

29. நான் 1975-ஆம் ஆண்டு பிறக்கவில்லை என்றால், நான் 2040-யில் எழுத்தாளனாக இருக்க முடியாது. சினிமாவில் வெற்றி பெற்றிருக்க முடியாது. அதனால் சினிமா கல்லூரி தொடங்கியிருக்க முடியாது. என் சினிமா கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் உலக தரத்துக்கு நகர முடியாது. ஆகவே நான் பிறக்க கூடாது என்று என் எதிரிகள் 1975-ஆம் ஆண்டுக்கு போயிருக்கிறார்கள்.

30. என்னை காப்பாற்றிக் கொள்ள இப்போது நான் 1975-ஆம் ஆண்டுக்கு போக வேண்டும். நான் பிறக்காமல் தடுப்பதை தடுக்க வேண்டும். ஒரு வேளை இந்த போராட்டத்தில் நான் தோற்று விட்டால், நான் உங்கள் நினைவிலிருந்து முழுவதும் காணாமல் போய் விடுவேன்.

31. நாளை முதல் உங்களோடு நான் முகநூலில் இருக்க மாட்டேன். என்னை நீங்கள் எங்கும் தேட முடியாது. என்னுடன் படித்த என் நண்பர்கள் யாருக்கும் நான் நினைவில் இருக்க மாட்டேன். என்னுடன் வேலை செய்த யாருக்கும் நான் ஒருவன் வாழ்ந்தேன் என்பதே தெரியாது. என் நினைவுகளை அனைத்தும் அழிக்கப்பட்டிருக்கும். நான் பயணம் செய்த எந்த ஊரிலும் என் நினைவுகள் இருக்காது.

32. பிளாக்(வலைபக்கம்),முகநூல், வாட்சாப், டிவிட்டர், என்று எங்குமே நான் இருக்க மாட்டேன். இதன் மூலம் எனக்கு நண்பர்கள் ஆன யாருக்குமே என்னை தெரியாது. என் அப்பாவுக்கு, அம்மாவுக்கு, என் கூட பிறந்தவர்களுக்கு யாருக்குமே என்னை தெரியாது. என் வீட்டில் மூத்த மகன் என் தம்பியாக இருப்பான். என்  மனைவிக்கு நான் யாரென்று தெரியாது. எனக்கு குழந்தைகள் பிறந்திருக்க மாட்டார்கள்.

33. என் பிள்ளைகளும் இந்த உலகத்திலிருந்து மறைந்து போவார்கள். அவர்களின் நண்பர்கள், ஆசிரியர்களுக்கும், யாருக்கும் அவர்களின் நினைவு இருக்காது. என் மூலம் ஏற்பட்ட அனைத்து உறவுகளும் மாறி போயிருக்கும். ஒரு சிறு சம்பவத்தை தடுப்பதன் மூலம் ஒரு மிகப்பெரிய மாற்றம் நடந்து விடும். அது ஒரு ஊரையோ, நாட்டையோ உலகத்தின் போக்கையோ கூட மாற்றலாம்.

34. நாளைக்கு நீங்கள் முகநூல் வந்து பார்க்கும் போது என் நினைவு உங்களுக்கு வந்தால், வாட்சாப் திறக்கும் போது என் நினைவு உங்களுக்கு வந்தால், நான் என் எதிரிகளை அழித்து வெற்றி பெற்று விட்டேன் என்பதனை அறிக. நான் ஜெயித்து விட்டேன். பிறந்து விட்டேன். 2040-யில் நான் திமிரோடு அலைந்துக் கொண்டிருப்பேன்; ஒரு எழுத்தாளனாக, சினிமாகாரனாக. நான் எழுதிய அனைத்தும் நடந்திருக்கும்.

35. மார்ச் 13, 1975-ஆம் நாளுக்கு நான் போகிறேன். என்னை காப்பாற்றிக் கொள்ள. நான் பிறப்பதை உறுதி செய்ய.

பி.கு.
இந்த சம்பவத்தை நான் 2040-யில் எழுதி, 1975-ஆம் ஆண்டுக்கு போகும் வழியில், 2018-ஆம் ஆண்டு இறங்கி போஸ்ட் செய்து விட்டு 1975-ஆம் ஆண்டுக்கு போய் கொண்டிருக்கிறேன்.

Saturday, 3 December 2022

கள்ளப் பார்வையில் உலகம்

1. இதுவும் ஒரு விவகாரமான பதிவுதான். தயவு செய்து யாரும் படிக்காதீர்கள். அப்படியே மீறி படித்தாலும், போன் போட்டு, என்ன விசயம் என்று கேட்காதீர்கள். ஆல்ரெடி உங்களுக்கு தெரிந்ததுதான். ஆனால், தெரியாதது போல் கேட்பதுதான் வருத்தமாக இருக்கும்.

2. குல்லினம் குவினுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. அதனால், இப்போது அவன் திருந்திட்டான் என்று குண்முக குவா; சிங்கப்பூரில் இருக்கும் அவரின் நெருங்கிய பெண் நண்பரிடம் சொன்னதாக, எனக்கும் அவருக்கும் தெரிந்த வஸ்தா ஒருவர் சொன்னார்.

3. நான் அப்போதே ஒன்று சொன்னேன். அவனெல்லாம் திருந்தக்கூடிய ஜென்மமே கிடையாது. அவன் செத்து ஒழிந்தால் ஒழிய அவனின் தீய குணங்களும் கேடு கெட்ட செயல்களும் மாறப்போவதில்லை என்று.

4. கடந்த ஓராண்டில் மட்டும், தனிப்பட்ட முறையில் எனக்கு அவன் பல தொல்லைகள் கொடுத்துள்ளான். இன்று காலையில்கூட எனக்கு ஒரு மெசேஜ் வந்திருந்தது. இதையெல்லாம் அவன்தான் செய்கிறான் என்பது எனக்கு உறுதியாக தெரியும். நானும் எத்தனையோ முறை போலிஸ் நிலையம் போய்விட்டேன். அப்படியேதான் இருக்கிறது. 

5. நான் மீண்டும் மீண்டும் ஒரு விசயத்தை தொடர்ந்து வலியிறுத்திக் கொண்டிருக்ககிறேன். இவனும் பினாங்கில் இருக்கும் கூண்டியனும் இப்படி தறி ஆடுவதற்கு மிக, மிக, மிக முக்கியமான காரணம் குண்முக குவாதான். இந்த குண்முக குவாவின் வெளி தோற்றத்தைப் பார்த்து இங்கு எல்லோரும் மயங்கி போய் நிற்கிறார்கள். 

6. குண்முக குவாவோடு நான் நெருங்கி பழகியவன் என்கிற முறையில், அவனின் உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை எனக்கு தெரியும். ரொம்ப ரொம்ப கெட்டவன். இதை சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். ஆனால், சாமி சத்தியமாக இதுதான் உண்மை. 

5. அடுத்தது குருஷ்ணன் குனியமும், குய்.எம்.கூர்த்தியும். இந்த இருவரும் நடுவில் கிருஸ்துவர்களாக மாறியவர்கள். இவர்கள் இருவரும்; இன்னும் சில பல்கலைகழக விரிவுரையாளர்களும் சேர்ந்துக் கொண்டு பல மாணவர்களையும் ஆசிரியர்களையும் மதம் மாற்றி இருக்கிறார்கள்.

5. நடுவில் மாறிய இவர்கள்தான் கொற கூட்டம். ஆனால், இவர்கள் நம்மைப் பார்த்து கொற கூட்டம் என்கிறார்கள். பிசாசுகளை கும்பிடுகிறோம் என்கிறார்கள். குருஷ்ணன் குனியமும் குய்.எம்.கூர்த்தியும் சேர்ந்து கொண்டு மதம் மாற்றிய விவகாரம் இங்கு கல்வி துறையில் இருக்கும் எல்லோருக்கும் தெரியும். 

6. இவர்களையும் தாண்டி இன்னும் இரண்டு கெட்டவர்கள் இருக்கிறார்கள். அந்த கூலிம் சாமியார் சைவ குணியாண்டியும், குண்ணியவானும். இவர்கள் மகா கெட்டவர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், இதை எல்லாம் வெறுமனே வாய் மூடி வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருப்பதால் இந்த மகா கெட்டவர்கள் எல்லாம் உத்தமர்களாகவும் மகா யோக்கியர்களாகவும் சமூகத்தில் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள்.

7. குல்லினத்திலிருந்து வெளியே வந்தவர்கள்கூட எழுதவதற்கு தயக்கிக் கொண்டும் பயந்து கொண்டும் இருந்த காலகட்டத்தில், 2018-ஆம் ஆண்டுக்கு பிறகு நான் தொடர்ந்து குல்லினத்தையும் குவினையும் அடித்துக் கொண்டே வந்தேன். அந்த மாற்றத்தை கடந்த நான்கு ஆண்டுகளில் பார்த்திருக்கலாம். இன்று பலரும் எழுதுவதற்கும் புத்தகம் போடுவதற்கும் தைரியமாக வெளியே வருகிறார்கள்.

8. மூன்று ஆண்டுகளுக்கு முன்; நிலங்களின் நெடுங்கணக்கு நாவல் வருவதற்கும் முன்பும்; இன்றைய இலக்கிய போக்கையும் ஒப்பிட்டு பாருங்கள். இன்று என்ன மாதிரியான மாற்றம் நடந்திருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். குவினின் அட்டகாசம் பெருமளவில் குறைந்துள்ளது. இது இங்கிருக்கும் எல்லோருக்கும் தெரியும்.

9. இந்த கெட்டவர்களை எல்லாம் நான் தொடர்ந்து கெட்டவர்கள் என்றே சொல்லிக் கொண்டு வருகிறேன். இவர்கள் கெட்டவர்கள் என்பதும் இங்கிருப்பவர்களுக்கும் நன்கு தெரியும். ஆனால், இருக்கிற இடம் தெரியாமல் இருந்துக் கொள்வோம் என்பது போல; நமக்கெதுக்குடா வம்பு என்று அப்படி அப்படியே எல்லோரும் அப்படி அப்படியே இருந்து கொள்கிறார்கள்.

10. இந்த கெட்டவர்களை எதிர்த்து நான் எழுதி வருவதை படிக்கும் சிலர், ’என்ன மதியழகன் இப்படி எழுதி விட்டான், அப்படி எழுதி விட்டான், அந்த டாக்டர் எவ்வளவு பெரிய மனுசன் தெரியுமா? இப்படி எழுதலாமா?’ என்று கேட்பவர்களுக்கு நான் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். 

11. குவின் செய்யும் மகா கெட்ட காரியங்களை எதிர்த்து நான் கேட்பதை நிறுத்தி கொள்கிறேன். ஆனல், நீங்கள் அந்த ஞாயத்தை கேளுங்கள். நீங்கள் ஞாயத்தின் பக்கம் நில்லுங்கள். நான் எதுவும் பேசாமல் ஒதுங்கிக் கொள்கிறேன். 

12. குவீன், கூண்டியன் செய்யும் தப்புகளை தட்டிக் கேளுங்கள்; அதற்கு எதிராக குரல் கொடுங்கள். நான் ஒதுங்கிக் கொள்கிறேன். கெட்ட வார்த்தையில் எழுதிவிட்டு அதை நவீன இலக்கியம், மகா புனிதம் என்று பேசுவதையும்; தலித் இலக்கியத்தை மலேசியாவில் கொண்டு வருவதையும் எதிர்த்து நீங்கள் பேசுங்கள். நான் வாய் மூடிக் கொள்கிறேன்.

13. புதிதாக எழுத வருபவர்களின் நூல்களை குறை சொல்ல வேண்டும் என்கிற ஒரே நோக்கத்தை கையில் வைத்துக் கொண்டு விமர்சனம் என்கிற பெயரில் கடித்து குதறிய அயோக்கியதனங்களை நீங்கள் தட்டிக் கேளுங்கள். நான் ஒதுங்கிக் கொள்கிறேன்.

14. இலக்கியத்தில் யாராவது முன் வரிசைக்கு வந்தால் ஆள் வைத்து அடிப்பது, ஆபாச படங்களை வெளியிடுவது, வாட்சாப் மூலம் தொந்தரவுகள் கொடுப்பது, அரசாங்க ஊழியர்கள் மீது பெட்டிஷன் எழுதிபோடுவது போன்ற அநியாயங்கள் நடக்கும்போது அதற்கு எதிராக நீங்கள் குரல் கொடுங்கள். நான் ஒதுங்கிக் கொள்கிறேன்.,

15. போலி முகநூல் அடையாளங்களை வைத்து கொண்டு, முகநூலில் அவதூறுகளைப் பரப்புவதற்கு எதிராக நீங்கள் குரல் எழுப்புங்கள். நான் ஒதுங்கிக் கொள்கிறேன்.

16. ஆனால், எனக்கு தெரியும். இந்த நாட்டில் யாருக்கும் அந்த தைரியம் கிடையாது என்று. ‘அவர்கள் இப்படி செய்கிறார்கள் என்றால், மதியழகனும் அவர்களோடு சமமாக மல்லுக் கட்டிக் கொண்டிருக்கிறார். சூரியனைப் பார்த்து நாய் குறைத்தால் கேடு சூரியனுக்குதான் என்று ஒதுங்கி போகாமல், சாக்கடை என்று தெரிந்து அவர்களோடு சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்.’ இப்படி பேசுவர்கள் கண்டிப்பாக கோழைகள்தான்.

17. இங்கு எல்லாமே தப்பு தப்பாக நடக்கிறது. அந்த தப்போடு நீங்கள் வாழ பழகிக் கொள்ளுங்கள். இங்கு மகா கெட்டவர்கள் இருக்கிறார்கள். அந்த கெட்டவர்களை எதிர்க்காமல் அவர்களோடு வாழ பழகிக் கொள்ளுங்கள் என்று நீங்கள் எனக்கு சொல்லிக் கொடுக்கிறீர்கள்.

18. ஆனால், தீமையை எதிர்க்க வேண்டும். கெட்டவர்களை அடையாளம் கண்டுக் கொள்ள வேண்டும். அநியாயத்திற்கு எதிராக குரல் குரல் கொடுக்க வேண்டும். இங்கு ஒருவருக்கு தீங்கு நடந்தால் அதை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும் என்று அடுத்த தலைமுறைக்கு கற்று தர நான் விரும்புகிறேன்.

19. கெட்டவர்கள் என்று தெரிந்தும், அவர்களின் தீய செயல்கள் தெரிந்தும் அவர்களுக்கு ஜால்ரா அடித்துக் கொண்டும், இந்த கெட்டவர்களை அழைத்து முன்னுரிமை அளித்து கொண்டும் இருக்கிறீர்கள். இந்த கேடுகெட்ட காரியங்கள் உங்கள் தலைமுறையோடு அழிந்து போகட்டும். அடுத்த தலைமுறையையாவது தைரியமான, யோக்கியமான தலைமுறையாக உருவாக்க வேண்டும்.

20. கெட்டவர்களை தூக்கி வைத்து கொண்டாடியும், அவர்களை உத்தமர்களாவும் புனிதர்களாகவும் இங்கு Potrait செய்து கொண்டிருக்கிறார்கள். நீங்கள் அதற்கு ஜால்ரா அடித்து கொண்டிருங்கள். உங்கள் சுய விருப்பு வெறுப்புக்காக நீங்கள் எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்து உங்கள் வாழ்க்கையை முடித்து கொள்ளுங்கள்.

21. ஆனல், உங்களை நான் கெஞ்சிக் கேட்டுக் கொள்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான், அடுத்த தலைமுறையையும் உங்களை போலவே ஜால்ரா அடிக்கும் கூட்டமாக உருவாக்கி வைத்து விட்டு போகாதீர்கள். இந்த இலக்கிய உலகிற்கு நீங்கள் செய்யும் மிகப்பெரிய கேடு இது. இலக்கிய உலகம் உங்களை ஒருபோதும் மன்னிக்காது.

22. ஒரு நல்லவனை கெட்டவனாக பார்க்கும் நிலையும்; ஒரு கெட்டவனை புனிதனாக உயர்த்தி பிடித்து ஜால்ரா அடிக்கும் நிலையும் ஒரே நேர்கோட்டில் நடப்பது ஒரு சமூகத்தும்; அது சார்ந்து இயங்கும் கலைக்கும் எழுத்துக்கும் நாம் செய்யும் மிக பெரிய துரோகம். அந்த துரோகத்தின் ஒரு பகுதியாக நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். 

23. ஆனால், அடுத்த தலைமுறையையும் உங்களைப் போலவே உருவாக்கி வைத்து விட்டு செல்லாதீர்கள். மாற்றம் என்பது தனி மனிதனிலிருந்தே தொடங்குகிறது. அதை நானே தொடங்கி வைக்கும் புள்ளியாக வாழ்ந்துவிட்டு போகிறேன். 

24. எதிரிக்கு எதிரி நண்பன் என்கிற கோட்பாட்டில் எல்லோருடனும் என்னால் கைக் கோர்க்க முடியாது. ஜால்ரா அடித்து பழகிய தரப்போடு நான் போய் சேர்ந்து உட்காரவும் முடியாது. நான் மதியழகன். எப்பவும் இப்படிதான் இருப்பேன். நான் நானாக வாழ கற்று கொண்டவன். நான் சரியாகத்தான் வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கையில் இருக்கிறேன்.

24. இறுதியாக; கடைசிவரை எனக்கு வாட்சாப்பில் மேசெஜ் வருவது நிற்கபோவதும் இல்லை, உங்கப்பன் மவனே என்று நான் எழுதுவதையும் நிறுத்த போவதும் இல்லை, கெட்ட காரியங்களை நிறுத்தி விட்டு நல்ல காரியத்தில் உங்கள் கவனத்தை செலுத்தலாமே என்று குல்லினம் தரப்புக்கும் எனக்கும் ’யாரும்’ சொல்ல போவதும் இல்லை. 

25. காரணம்; துரோகத்தின் ஒரு புள்ளியாக இந்த கள்ள உலகத்தில் நீங்கள் வாழ்ந்துக் கொண்டிருக்கிறீர்கள்.

ஆஸ்ட்ரோ குறும்படம் போட்டியில் என்னை கவர்ந்த சில அம்சங்கள்.

1. ஏக்கம் – மிக கச்சிதமாக, நேர்த்தியாக படமெடுத்திருக்கிறார்கள். நாட்டு பற்றை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம். ஒன்பது நிமிடம் மட்டும்தான். ஆனால், மனதைத் தொடும்படி மிக அழகாக தீபாவளியோடு இணைத்திருக்கிறார்கள். படத்தொகுப்பு, நடிப்பு, ஒளிப்பதிவு, Sound Design மிக நேர்த்தியாகவும் பாராட்டும்படியும் இருந்தது. பத்து குறும்படத்திலும் இது தனியாக தெரிவதற்கு மிக முக்கியமான காரணம்; நம் நாட்டின் மீது நமக்கிருக்கும் விசுவாசத்தை மையாக கொண்டது. சியர்ஸ் டீம். 

2. ரெக்கைக் கட்டி பறந்தோமே! – பிரிந்த நான்கு நண்பர்களைத் தேடி புறப்படும் ஒருவனின் கதை. சந்திக்க முடியாமல், மறக்க முடியாத ஒரு நண்பன் நம் வாழ்க்கையில் எப்போதும் இருப்பான். அந்த உணர்வுகளை நம்முள் கடத்திய அனுபவம் தந்தது இந்த படம். மேக்கிங்-யில் சில/பல குறைகள் இந்த படத்தில் தெரிந்தாலும்; நட்பின் உணர்வுகளை நம்முள் கடத்திய வகையில் இந்த குறும்படம் என்னை ஆட்கொண்டது. மிக இலகுவாக நாம் கதைக்குள் நுழைந்து விட்டதால், மற்ற எந்த குறையும் கண்ணுக்கு தெரியவில்லை. ஐவரில் ஒருவராக அடிதடி ரகளை செய்துக் கொண்டிருக்கும் முரட்டு கை திருமணமான பின்பு மனைவியிடம் அடிவாங்குவதை வாகனத்தில் பயணித்துக் கொண்டே சொல்லும் இடம் குபீர் சிரிப்பு.

3. தீ.பா.லி – மூன்று குட்டி பசங்க ஒன்றாக போட்டோ எடுக்க செய்யும் குறும்புதனங்களைக் கதையாக கொண்டது இந்த குறும்படம். படத்தின் காட்சியமைப்பு(Frame) கவரும் வகையில் இருந்தது. அந்த காட்சியமைப்புக்கு ஏற்ற வர்ணத்தை(DI) பின்புற காட்சியாக தேர்ந்தெடுத்தது படக்குழுவினரின் சென்ஸ் தெரிகிறது. படப்பிடிப்பு தளத்தை(Location) தேர்ந்தெடுத்ததில் படக்குழுவினரின் மிக பெரிய வெற்றி. நான்கு சிறுவர்களை மட்டுமே திரையில் தெரியும்படி காட்டி படம் எடுத்தது நல்ல யுக்தி. படகில் படுத்துக் பேசிக் கொண்டிருக்கும் முதல் காட்சியே கவரும் வகையில் இருந்தது.

4. வந்தனா – மூன்று ஜோடிகள், மூன்று வெவ்வேறு கதைகள். ஆனால், மூன்று கதைகளுமே லாக்டவுனை மைய புள்ளியாக கொண்டு நகரும் கதை. மூன்று ஜோடிகளும் ஒரே இடத்தில் இருப்பது போல் காட்டி, படத்தின் திருப்பு முனையாக(Twist) ஆறுபேரும் வெவ்வேறு இடத்தில் இருப்பது போல் காட்டியது கவரும் வகையில் இருந்தது. இறுதியில், மூன்று ஜோடிகளும் சந்திக்கும்போது நாம்மையும் மீறி சிறு துளி கண்ணில் வந்து விடுகிறது. படத்தின் நீளத்தை மட்டும் குறைத்திருந்தால் மிக சிறப்பாக இருந்திருக்கும். லோகன் நடிப்பில் மிளிர்ந்து நிற்கிறார். சுவிட் ட்ரிம்ஸ் தொடங்கி இப்போது வரை லோகன் நடிப்பில் புள்ளிகளை அள்ளி விடுகிறார்.

5. மற்றப்படி; அனைத்து குறும்படமும் நன்றாகத்தான் இருந்தது. சில குறும்படங்களின் கதை நன்னெறி பண்புகளை மையமாக வைத்து கருத்து சொல்லும் வகையில் இருந்தது. அதுவும் ஒருவகை யுக்திதான். 

6. மகேந்திரன், இர்ஃபான் சைனி போன்ற பெரிய ஸ்டார்கள் நடித்த வரம் ஒரு அருமையாக கதைக்களம். Along the Gods போன்று புற/அக உலகைப் பற்றி பேசிக்கூடியது. ஆனால், மெதுவாக நகரும் கதையினாலும் நாம் பார்த்து பழகிய காட்சிகளாலும் இறுதியாக கருத்து சொல்லும் யுக்தியாலும் அந்த அற்புத கதைக்களத்தை மிஸ் பண்ணிட்டாங்க. 

7. துர்கா – இந்த குறும்படம் எனக்கு பிடித்திருந்ததுதான். ஆனால், உருவாக்கத்தில் கண்ணுக்கு தெரியும் குறைகள் இருந்தது. திறம்பட திட்டமிட்டு படத்தை எடுத்திருந்தால் நம் நாட்டுக்கு லேடி ஸ்டார் படமாக இது வந்திருக்கும். விஜயசாந்தி வகை படங்கள் நம்மிடம் இல்லை. அந்த வகையில் இது அந்த இடத்தை பிடித்திருக்க வேண்டியது. ஜஸ்ட் மிஸ்ஸு.

8. திருநாள் வியூகம், பாட்டி மூச்சு நின்னு போச்சு இரண்டும் காமேடி டிராக்கில் முயற்சித்து பார்த்திருக்கிறார்கள். இதில் திருநாள் வியூகம் நம்மை ஓரளவு கவரும் வகையிலேயே உள்ளது. படுமோசம் என்று சொல்வதற்கில்லை.

9. வர்ணங்கள், தந்தைக்கு தலை தீபாவளி இரண்டும் ஓவர் செண்டிமெண்ட் வகை உணர்வை எனக்கு கொடுத்தது. பிழிந்து எடுத்து விட்டார்கள். தந்தைக்கு தலை தீபாவளியின் பிளஷ்பேக் பாராட்டும்படியும் மிக அழகாகவும் இருந்தது. சூரியன் மகேசன் தன் உடல் மொழியாலும் நடிப்பாலும் அந்த கணீர் குரலாலும் அசத்தி எடுத்து விட்டார். காட்சியமைப்பில் அந்த பிளஷ்பேக் ஒருவித புது அனுப்பவத்தைக் கொடுத்தது.

கேமரன் மலையும் சிம்மாதிரியும்.

4 டிசம்பர் 2018-ஆம் ஆண்டு எழுதிய கட்டுரை.

1. கேமரன் மலை தனி நாடாளுமன்ற தொகுதியாக உருவான 2004 மற்றும் 2008-யில் நடந்த இரண்டு தேர்தலிலும் பாரிசான் வேட்பாளர் தேவமணியை எதிர்த்து நின்றவர் சிம்மாதிரி. இந்த இரண்டு தேர்தலிலும் கணிசமான ஓட்டுகளை வாங்கி தேவமணிக்கு கடுமையான போட்டியை கொடுத்தவர்.

2. 2008-ஆம் ஆண்டு வரை எதிர்கட்சி சார்ப்பில் பொது தேர்தலில் போட்டியிட ஆட்கள் கிடைக்க மாட்டார்கள். அதுவும் DAP சீட் எல்லாம் சீப்படும். கிடைப்பவர்களை எல்லாம் நிற்க வைப்பார்கள். ஆனால் கேமரன் மலையை பொறுத்தவரையில் சிம்மாதிரி உள்ளூர் தலைவராக மட்டும் இருக்கவில்லை. கேமரன் மலையின் நாடி துடிப்பை பார்த்தவர். 

3. ஆள் கிடைக்காமல் போட்டியிட நிற்கவைக்கப்பட்ட தலைவர் அல்ல சிம்மாதிரி. தன் சொந்த காசை செலவழித்து கேமரன் தொகுதியில் தனக்கான ஒரு செல்வாக்கை உருவாக்கி வைத்திருந்தார். இரண்டு தேர்தலிலும் தன் சொந்த செல்வாக்கின் மூலம் கணிசமான ஓட்டுக்களை சேகரித்து வைத்திருந்தார்.

4. 2008-ஆம் ஆண்டு ஏற்பட்ட அரசியல் மாற்றத்துக்கு பிறகு எதிர்கட்சிகளின் சீட்-க்கு மவுசு ஏற்பட்டது. இதன் பிறகு சீட்கள் ஒதுக்குவதில் DAP தன் இன பாகுபிரிவினையை காட்டியது. சீனர்கள் அதிகமான இடங்களில் வெற்றி பெறுவதை உறுதி செய்வதை தன் நோக்கமாக கொண்டிருந்தது DAP. 

5. இதை அமுல்படுத்த 2013-ஆம் ஆண்டு நடந்த பொது தேர்தலில் சீட்-கள் பிரிப்பதில் DAP ஏகப்பட்ட தந்திரங்களை செய்தது. இந்தியர்களின் செல்வாக்கை உடைக்கும் விதமாக DAP பல சீட்-களை இடம் மாற்றி வைத்தார்கள். அதில் பல இந்திய தலைவர்களின் பெயர்கள் தூக்கியடிக்கப்பட்டது.

6. DAP-யின் இந்த தூக்கியடிக்கும் நடவடிக்கையில் பெரிதும் பாதிக்கப்பட்டது கேமரன் மலையும், சிம்மாதிரியும்தான். தெலுக் இந்தான் தொகுதியில் போட்டியிட்ட மனோகரனை தூக்கி கேமரன் மலையில் போட்டார்கள். தெலுக் இந்தான் தொகுதியை சீனருக்கு கொடுத்தார்கள்.

7. முதல் இரண்டு தேர்தலிலும் வெற்றி பெற்றதால் கேமரன் பாரிசானின் கோட்டையாக பார்க்கப்பட்டது. அதனால் தன்னை தற்காத்து கொள்ள பழனிவேலு கேமரன் மலைக்கு வந்தார். ஆனால் DAP மனோகரனை பழனிக்கு எதிராக கொண்டு வந்தார்கள். இதுதான் DAP செய்த மிகபெரிய தவறு. 

8. DAP மனோகரனை தோற்கடித்து பழனி வெற்றி பெற்றார். ஆனால் சிம்மாதிரி நிறுத்தியிருந்தால் 2013-இல் கேமரன் மலை பாரிசான் கையை விட்டு போயிருக்கும். பழனியை சிம்மாதிரி தோற்கடித்திருப்பார். 

9. கடந்த 14-வது பொது தேர்தலில் மீண்டும் மனோகரனே கேமரன் மலையில் DAP நிறுத்தியது. எங்கிருந்தோ வந்த சிவராஜ் வெற்றி பெற்றதற்கு மனோகரன் மீண்டும் போட்டியிட்டதே காரணம்.

10. மனோகரன் நல்ல மனிதர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் கேமரன் மலையில் போட்டியிட அவர் சரியான தேர்வு கிடையாது.  அதற்கு முக்கிய காரணம், தேர்தல் சமயத்தில் மட்டும் தொகுதி பக்கம் செல்லும் வழக்கம் கொண்டவர் மனோ. அதைவிட முக்கியம் உள்ளூர் DAP தலைவர்களோடு வேலை செய்யும் பக்குவம் அவரிடம் இல்லை.

11. சீனர்கள் மற்றும் ஓராங் அஸ்லிகளின் ஓட்டை மட்டுமே மனோகரன் நம்பினார். இந்தியர் ஓட்டை அவர் பெரிதாக பொருட்படுத்தவில்லை. இதுவே இரண்டு முறையும் கேமரன் மலையில் மனோகரன் தோல்வியடைந்ததற்கு அதிமுக்கிய காரணமாக அமைந்தது.

12. கேமரன் மலை சிம்மாதிரியின் தொகுதி. அது ஞாயமாக சிம்மாதிரிக்கே கொடுத்திருக்க வேண்டும். ஆனால் இந்த விவகாரத்தில் DAP-யில் இருக்கும் எந்த இந்திய தலைவர்களும் சிம்மாதிரிக்கு ஆதரவாக பேச முன் வரவில்லை.

13. மனோகரனின் தெலுக் இந்தான் தொகுதியை பிடுங்கி சீனருக்கு கொடுத்த போதும், DAP இந்திய தலைவர்கள் அனைவரும் வாய்மூடி ஊமைகளாக இருந்தார்கள். கேமரன் மலையை சிம்மாதியிடம் இருந்து பிடுங்கி மனோகரனுக்கு கொடுத்த போதும், எல்லோரும் வாய் மூடி கொண்டு இருந்தார்கள்.

14. சிம்மாதிரி DAP கட்சியின் மூத்த தலைவர். DAP கட்சிகாக தொடர்ந்து உழைத்து வருபவர். அவருக்கு சீட் கிடைக்காத போது, DAP இந்தியர்கள் ஒன்றிணைந்து குரல் கொடுத்திருக்க வேண்டும். ஒரு இந்தியருக்கு பாதிப்பு வரும்போது, மற்ற இந்தியர்கள் தைரியமாக முன் வந்து குரல் கொடுத்திருக்க வேண்டும். 

15. ஆனால் DAP-யில் இருக்கும் இந்திய தலைவர்களுக்கு தங்கள் பதவியே முக்கியம். வாய் திறந்தால் பதவி பறிக்கப்படும் என்று பயந்துக் கொண்டு அப்பாவுக்கும் மகனுக்கும் அடிமையாக இருகிறார்கள்.

16. மஇகா தலைவர்களுக்கும், DAP-யில் இருக்கும் இந்திய தலைவர்களுக்கும் பெரிதாக வித்தியாசம் ஒன்றும் இல்லை. பதவி மோகத்தில் அடிமைகளாக வாழ பழகிக் கொண்டவர்கள். தங்கள் பதவிக்கு ஆபத்து வராமல் பார்த்துக் கொள்வார்கள்.

17. இந்த நேரத்தில் 80-களில் நடந்த ஒரு பழைய சம்பவம் ஞாபகத்திற்கு வருகிறது. பொது தேர்தலில் போட்டியிட இந்திய தலைவர்களின் பெயர் பட்டியலை DAP தலைமையகத்திற்கு DAP இந்தியர்களின் சார்ப்பில் கொடுக்கப்பட்டது. அந்த பட்டியலில் உள்ள சில இந்திய தலைவர்களுக்கு சீட் கொடுக்க தலைமை மறுத்தது.

18. தாங்கள் கொடுக்கும் பட்டியலில் ஒரு இந்திய தலைவரின் பெயர் விடுபட்டாலும்; தாங்கள் யாருமே பொது தேர்தலில் போட்டியிட மாட்டோம் என்று உறுதியாக கூறினர். வேறு வழி இல்லாமல் அத்துனை இந்தியர்களுக்கும் DAP சார்ப்பில் போட்டியிட சீட் கொடுக்கப்பட்டது. இந்த மாதிரியான நேர்மையான, சமூக அக்கறையுள்ள இந்திய தலைவர்கள் இன்று DAP யாரும் இல்லை. 

19. DAP-யில் இருக்கும் அத்துனை சீன/இந்திய தலைவர்கள் அனைவருக்கும் தெரியும் கேமரன் மலைக்கு சரியான வேட்பாளர் சிம்மாதிரிதான் என்று. சிம்மாதிரிக்கு கிடைக்க வேண்டியதை ஞாயமாக கேட்டு வாங்கி கொடுக்க வேண்டும்.

20. மனோகரனின் தொகுதி தெலுக் இந்தான். மனோகரன் தெலுக் இந்தானை போராடி பெற வேண்டும். சிம்மாதிரியின் தொகுதியை பிடுங்கிக் கொள்ள கூடாது. கேமரன் மலையில் போட்டியிட மனோகரனை DAP கேட்டுக் கொண்ட போது; மனோகரன் அதை மறுத்திருக்க வேண்டும். அதுவே ஞாயமான ஒரு மனிதன் செய்யக்கூடியது.

21. DAP கட்சியில் நேர்மை கொஞ்சமாவது இருந்தால், மிக நீண்ட காலமாக கட்சிக்காக போராடிவரும் சிம்மாதிரிக்கு கேமரன் மலையில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். மனோகரனை நிறுத்தி மீண்டும் தலையில் மண்ணை போட்டுக் கொள்ளாமல் இருந்தால் சரி.

டத்தோ ஸ்ரீ அன்வாரின் வெற்றி.

14 நவம்பர் 2022 எழுதிய பதிவு

1. நாட்டின் 15-வது பொதுத்தேர்தல் குறித்துப் பல ஆருடங்களும், கருத்துகளும், கருத்துக் கணிப்புகளும், எதிர்பார்ப்புகளும் மக்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்திய வண்ணமாக உள்ளன.

2. இந்தத் தேர்தலில் டத்தோ ஸ்ரீ அன்வார் வெற்றி பெற்றுப் பிரதமர் ஆவார் என்பது இன்றைய நாளில், ஏறத்தாள இறுதி நிலவரமாக உள்ளது. நாட்டின் 10-ஆவது பிரதமராக அன்வார் பதவி ஏற்பது இந்த முறை எந்தச் சிக்கலும் இல்லாமல் நடந்து விடும் என்றே யூகிக்க முடிகிறது.

3. டத்தோ ஸ்ரீ அன்வார் வெற்றி பெற்றுப் பிரதமர் ஆவார் என்பது எதன் அடிப்படியில் யூகிக்க முடிகிறது என்று பார்ப்போம்.

அன்வாரின் பலம்

1. இந்தத் தேர்தலில் யாருடைய உதவியும் இல்லாமல், தனித்துத் தன்னுடைய பலத்தை மட்டுமே நம்பி களத்தில் இறங்கிய தன்னம்பிக்கையே அவரின் முதல் வெற்றியாக அமைந்து விட்டது. 

2. அன்வார் தன் பெரும்பாலான நாள்களைச் சிறையிலேயே கழிக்க நேரிட்டது. தொடர்ந்து அவரைச் சிறையில் தள்ளி முடக்கி வத்தார்கள். 1998-ஆம் ஆண்டு துணைப் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு; இரண்டு பொதுத் தேர்தலில்தான் அன்வார் தலைமையேற்றுப் போட்டியிட்டார். அந்த இரண்டு பொதுத் தேர்தலிலும் அன்வாரின் தனித்த பலம் நிரூபிக்கப்படவில்லை. கூட்டணிக் கட்சி ஆதிக்கத்தில் சிக்கிக் கொண்டார்.

3. 1999-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அன்வாரின் சிறைவாசத்தை முழுமையாக அறுவடை செய்தது பாஸ் கட்சிதான். டி.ஏ.பி 10 தொகுதியிலும், கெஅடிலான் 5 தொகுதியிலும் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. பாஸ் கட்சி 27 தொகுதிகளில் அபார வெற்றி அடைந்தது. அதற்கு முந்தைய தேர்தலில் பாஸ் கட்சி 7 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது.

4. போலிஸ் கஸ்டடியில் அன்வாரின் முகத்தில் ஏற்பட்டிருந்த காயத்தை தன் அனைத்துப் போஸ்டர்களிலும் போட்டு, Marketing Tools-ஆகப் பயன்படுத்தி பாஸ் கட்சி தனக்கு ஒரு பெரிய விளம்பரத்தைத் தேடிக் கொண்டது.

5. 2004-ஆம் ஆண்டு நடந்த தேர்தலின் போது அன்வார் சிறையில் இருந்தார். துன் மகாதீர் பதவி விலகி; படாவி தலைமையில் நடந்த முதல் தேர்தல் என்பதால், பாரிசான் மிக பெரிய வெற்றி அடைந்திருந்தது. பாஸ்+டி.ஏ.பி+பி.கே.ஆர் கூட்டணி மொத்தமாக 20 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது.

6. அடுத்து நடந்த 2008-ஆண்டு தேர்தல்தான் எதிர்க்கட்சிகளில் மகத்தான ஒரு தேர்தலாக அமைந்தது. பக்காத்தான் கூட்டணியை அன்வார் வழி நடத்தினாலும்; அந்தத் தேர்தலில் போட்டியிட முடியாத சூழலில் இருந்தார். அன்வார் பொதுத் தேர்தலில் போட்டியிடக்கூடிய கால அவகாசம் வருவதற்குள் தேர்தலை நடத்திவிட வேண்டும் எனப் பாரிசான் அவசரப்பட்டார்கள். 

7. பக்காத்தான் வெற்றி பெற்றாலும் அன்வார் பிரதமர் ஆகமுடியாத; நீதிமன்றத் தண்டனை முடிந்த கால கெடு இருந்தது. 2008-ஆம் ஆண்டு எதிர்க்கட்சிகள் மிகப்பெரிய வெற்றி அடைந்ததற்கு இரண்டு முக்கியக் காரணங்கள் இருந்தன. ஒன்று பாரிசான் மீது இருந்த கடுமையான வெறுப்பு; அடுத்தது இண்ட்ராப். 

8. 2008-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பக்காத்தான் 82 இடங்கள் வெற்றி பெற்றதற்கு இண்ட்ராப் மிகப் பெரிய காரணமாக இருந்ததை யாரும் மறுக்க முடியாது.

9. 2013-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அன்வார் முன்னிலை படுத்தப்பட்டாலும்; அவரின் பலம் நிரூப்பிக்கப் படவில்லை. நஜிப் பதவியேற்று நடந்த முதல் தேர்தலது. எதிர்க்கட்சி கூட்டணியில் இருந்த கட்சிகள் தங்களை வலுப்படுத்திக் கொள்ள காட்டிய முனைப்பை; அன்வாரின் பலத்தை அதிகரிக்கரிக்கவோ; நிரூப்பிக்கவோ முனைப்புக் காட்டவில்லை. அவரவர் அவரவரின்  கட்சிகளைத்தான் கவனத்தில் எடுத்துக் கொண்டார்கள். ஆட்சி மாற்றம் நடக்கும் என்பதில் அவநம்பிக்கை இருந்தது.

10. 2018-ஆம் ஆண்டு நடந்த தேர்தல் முற்றிலும் வேறு மாதிரியானது. நம் நாட்டின் வரலாற்றை மாற்றி எழுதிய திருவிழா. பாரிசான் மட்டுமே ஆட்சியில் அமரமுடியும் என்கிற விதியை மாற்றி எழுதிய தருணம். இது குறித்துத் தனி நீண்ட கட்டுரையே எழுதலாம். 

11. 2018-ஆம் ஆண்டு நடந்த தேர்தலின் போதும் அன்வார் சிறையிலிருந்தார். நஜிப் மீது இருந்த ஊழல் குற்றச்சாட்டுகள், அதிகார ஆணவம், பாரிசான் மீது இருந்த வெறுப்பு, துன் மகாதீரின் சாணக்கியம் எனப் பல காரணங்கள் இந்தத் தேர்தலில் முதன்மை வகித்தன.

12. 1999-ஆம் ஆண்டு முதல் 2004-ஆம் ஆண்டு வரை நடந்த தேர்தல் காலங்களில் அன்வார் சிறையில் இருந்தார். 2008-ஆம் ஆண்டு மற்றும் 2013-ஆம் ஆண்டு நடந்த தேர்தல் காலங்களில் அன்வார் வெளியிலிருந்தாலும்; 2008-ஆம் ஆண்டு இண்ட்ராப் மற்றும் பெர்சே பேரணிகளும், 2013 நஜிப்பின் ஆதரவு அலையும் அன்வாரின் பலத்தை நிரூப்பிக்க வாய்ப்பு ஏற்படுத்தவில்லை. 2018-ஆம் ஆண்டு அன்வார் அரசியல் மற்றும் தேர்தல் தேவைக்காக பயன்படுத்திக் கொள்ளப்பட்டார்.

13. ஆனால், இந்தத் தேர்தல் அப்படியில்லை. இது முழுக்க முழுக்க அன்வார் ஒருவரின் பலத்தால் நடக்கும் தேர்தல். அன்வார் பிரதமர் ஆக வேண்டும் என்கிற மக்களின் எழுச்சியோடு நடக்கும் தேர்தல்.

14. பிற தேர்தல்களில் வெவ்வேறு காரணங்கள் இருந்தன. ஆனல், இந்தத் தேர்தலில் அன்வார் பிரதமர் ஆகியே தீர வேண்டும் என்கிற கோஷம்தான் எங்கும் கேட்கிறது. இந்த முறை டி.ஏ.பி, பி.கே.ஆர், அமானா கட்சிகளுக்கு விழும் ஓட்டுகள் அனைத்தும் அன்வார் பிரதமர் ஆக வேண்டும் என்கிற ஒரே காரணத்துக்காக விழும் ஒட்டுகள்.

15. பக்காத்தான் கூட்டணிக்காக அன்வாரை ஆதரிக்கவில்லை. அன்வாருக்காகப் பக்காத்தான் கூட்டணியை மக்கள் ஆதரிக்கிறார்கள். அன்வார் பிரதமராக வேண்டும் என்கிற ஒற்றைக் காரணத்துக்காகப் பக்காத்தானுக்குக் கட்சி வேறுபாடின்றி ஓட்டுப். போட முடிவெடுத்திருக்கிறார்கள். 

16. மலேசிய வரலாற்றிலேயே தனி ஒரு மனிதனுக்காக ஓட்டு திரும்பி இருப்பது இதுதான் முதல்முறை. இதற்கு முன்பு நஜிப்-க்கு இந்த மாதிரியான அலை இருந்தது. ஆனால், நஜிப் பாரிசான் கூட்டணியை நம்பி இருந்தார். இந்த முறை அன்வார் கூட்டணியை நம்பி இருக்கவில்லை. மக்களின் அபிமான பிரதமர் வேட்பாளராகக் களத்தில் நிற்கிறார்.

17. நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட முதல் நாளே அன்வார் தடாலடியாகக் களத்தில் இறங்கினார். யாருக்கும் காத்திருக்கவில்லை. அன்வார்தான் முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். தேர்தல் வாக்குறுதி அறிக்கையையும் முதலில் வெளியிட்டவர் அன்வார்தான். முதல் தேர்தல் பிரச்சாரத்தையும் அவரே தொடக்கி வைத்தார். பிறகுதான் பாரிசான், பெரிக்காத்தான் கூட்டணிகள் களத்தில் இறங்கின.

18. இந்தத் தேர்தலில் அன்வார் மிகவும் சுறுசுறுப்பாகவும் பம்பரமாகவும் சுழன்று கொண்டிருக்கிறார். போகும் இடத்தில் எல்லாம் கூட்டத்தை கூட்டிக் கொண்டே போகிறார். அன்வார் கூட்டத்தில் இருக்கும் களை பிற கூட்டணிக் கூட்டங்களில் இல்லை. பக்காத்தான் கூட்டணியில் இருக்கும் கட்சிகளின் கூட்டத்தில்கூட அன்வார் இல்லாத மேடை பிரகாசம் குறைந்தே காணப்படுகிறது.

19. வழக்கமாகப் பக்காத்தான் கூட்டணியில் மற்றக் கட்சிகளின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். இந்த முறை மேடையை தன் வசமாக்கிக் கொண்டுள்ளார் அன்வார். கூட்டணிக் கட்சிகளைத் தனக்குக் கீழ் கட்டுப்பட வைத்திருக்கிறார். இஃது அன்வாரின் தலைமைத்துவப் பண்பைக் காட்டுகிறது. ஒரு சிறந்த தலைவனுக்குத் தனக்குக் கீழ் உள்ளவர்களை அடக்கி ஆளத் தெரிந்திருக்க வேண்டும். 

20. எம்.ஜி.ஆர் போல் வேடமிட்டுக் கொண்டு ஆடுவது, ரஜினி படம்போட்ட சட்டைகளைப் போட்டுக் கொண்டு வருவது போன்ற காரியங்களில் ஈடுபடாமல் மிகவும் நாகரீகமாக, பண்பாக ஒரு பிரதமருக்கு உரிய மரியாதையோடு மேடைகளில் வலம் வருகிறார். இந்த முறை அன்வாருக்கு யாரோ ஒருவர் பின்னாடி இருந்து கொண்டு நல்ல ஆலோசனைகள் வழங்கிக் கொண்டு இருப்பது போல் தெரிகிறது.

21. அன்வாரின் பலம் இந்த முறை அவர் வெற்றி பெறுவதற்கான எல்லா வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. 

பாரிசானின் பலவீனம்

1. மலாக்கா மற்றும் ஜொகூர் மாநிலங்களில் நடந்த தேர்தலில் பாரிசான் அடைந்த வெற்றியை மனத்தில் வைத்துக் கொண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும் வெற்றி பெற்று விடலாம் என்று கணித்திருக்கிறார்கள்.

2. வெள்ளம் ஏற்படக்கூடிய காலத்தில் தேர்தலை நடத்த நாடாளுமன்றத்தைக் கலைத்தது பாரிசானின் முதல் பலவீனமாக அமைந்து விட்டது. 

3. ஓட்டு சக்தியை வைத்திருக்கும் முக்கிய அம்னோ தலைவர்களுக்கு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்காதது பாரிசானுக்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. கைரிக்குப் பாரம்பரிய தொகுதியை வழங்காதது, சகிடான் காசிமுக்குச் சீட் வழங்காதது நிச்சயமாகத் தேர்தலில் பாரிசானின் ஓட்டைப் பெருமளவில் பாதிக்கும்.

4. வேட்பாளர் நியமனத்தில் ஏற்பட்ட சலசலப்பும் தேர்தலில் பாரிசானின் வெற்றியைப் பாதிக்கும். பத்து தொகுதியில் ம.இ.காவுக்கும் ம.சீ.சாவுக்கும் ஏற்பட்ட மோதல் பிறகு பல தொகுதிகளிலும் எதிரொலிக்கும்.

5. தேர்தல் பிரச்சாரப் பதாகைகளில் பிரதமர் வேட்பாளரான டத்தோ ஸ்ரீ இஸ்மயில் சப்ரியை முன்னிலைப்படுத்தாமல், அம்னோ கட்சியின் தலைவர் சாயிட் அமிடியை முன்னிலைப்படுத்துவது பாரிசானுக்குப் பலவீனம்தான்.

6. ம.இ.கா தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாகச் சொன்னது கூட்டணியில் ஏற்பட்ட சலசலப்பு அப்பட்டமாக வெளியில் தெரிந்தது. இதுவும் பாரிசானுக்குச் சாதகமான ஒன்று இல்லை.

7. பாரிசானின் இந்தப் பலவீனத்தால் சிதறும் ஓட்டுகள் தான் ஸ்ரீ முகைடினின் பெரிக்காத்தான் நேஷனலுக்கு விழும் வாய்ப்பே அதிகம் இருக்கிறது. அம்னோவின் எதிர்ப்பு ஓட்டுகளை இந்த முறை பெரிக்காத்தான் சிந்தாமல் சிதறாமல் அள்ளிவிடும் நிலமையே நிலவுகிறது. முகைதீன் கொஞ்சம் கொஞ்சமாக ஆதரவு கூட்டத்தைக் கூட்டிக் கொண்டு முன்னேறி வருகிறார். 

8. பாரிசானின் ஓட்டுகள் உடைந்து பெரிக்காத்தானுக்குப் போகும் நிலையில்; பாரிசானும் வெற்றி பெற முடியாது பெரிக்காத்தானும் வெற்றி பெற முடியாது. இஃது அன்வாருக்கு மிகச் சாதகமான ஒன்று.

9. ஒட்டு மொத்தமாகத் தேசிய நிலையில் 10 முதல் 15 விழுக்காடு வரை அன்வாருக்குப் பிரதமருக்கான ஓட்டுகள் உயர்ந்துள்ள நிலையில்; பாரிசானின் பலவீனத்தால் சிதறும் ஓட்டுகள் பெரிக்காத்தானுக்குப் போகும் நிலையில்; ஒவ்வொரு தொகுதியிலும் இருக்கும் பாரம்பரிய ஓட்டுகள் மூலம் அன்வார் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கிறது.

இறுதியாக;

1. டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் 25 ஆண்டுகால பிரதமர் ஆகும் கனவு நினைவாகும் இந்த வேளையில், ஒரு சாதரண மலேசியக் குடிமகனாகச் சில கருத்துகளை அவருக்கு முன் வைக்க விரும்புகிறேன்.

2. முதலாவது; அன்வார் கண்டிப்பாகத் துணைப் பிரதமரை நியமிக்க வேண்டும். அஃது அமானா கட்சியிலிருந்து தேர்ந்தெடுத்தால் பெரும் பலமாக இருக்கும். 

3. இரண்டாவது; பக்காத்தானின் 22 மாத ஆட்சி காலத்தில் கெட்ட பெயரைச் சம்பாதித்தவர்களுக்கு மீண்டும் அமைச்சர் பதவி தரக்கூடாது. நாட்டிற்கு தேவையான கெட்டிகாரர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

4. மூன்றாவது; கட்சியில் தனக்கு உண்மையான விசுவாசிகள் யார் என்பதைக் கண்டு கொண்டு அவர்களுக்குத் தகுந்த மதிப்புத் தரவேண்டும். ரபிசி மீது ஒரு கண் வைத்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், இன்னொரு அஸ்மின் உருவாவதைத் தடுக்க முடியாது.

5. நான்காவது; இது ரொம்பவும் முக்கியமானது. நிதித்துறை மற்றும் பொருளாதரத்துறை இரண்டையும் ஒன்றிணைத்து அதைத் தனக்குக் கீழ் வைத்துக் கொள்ள வேண்டும். பிரதமர் பதவியோடு நிதியமைச்சர் பதவியையும் ஏற்க வேண்டும். 

6. படாவி, நஜிப், மீண்டும் துன் மகாதீர், முகைடின், இஸ்மயில் சப்ரி என அனைவரையும் இந்த நாடு பிரதமர்களாகப் பார்த்து விட்டது. அதனால், அன்வார் இந்தத் தேர்தலில் புதுமுகமாக/மறுமலர்ச்சி முகமாக மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார்.

7. இந்தத் தேர்தலில் அன்வார் வெற்றி பெறப் போவது உறுதியான நிலவரமாக இருப்பதால், இந்த வெற்றியை தக்க வைத்துக் கொண்டு; நாட்டின் 10-வது பிரதமாராகப் பதவி ஏற்பது அவரின் பொறுப்பு.

8. இன ஒற்றுமையை மேம்படுத்தி பல்லினக் கட்சியின் தேவையையும்
அவசியத்தையும் நாட்டிற்கு எடுத்துரைக்க வேண்டும். இனரீதியான அரசியலுக்கு முற்றுப்புள்ளி இடுவதோடு, அமைச்சர்களாக நியமிக்கப்படுபவர்கள் மதம், மொழி, இனம் கடந்து நாட்டுநலனை முன்னிறுத்திச் செயலாற்றுவதை உறுதி செய்ய வேண்டும். 

9. இந்த ஒரு தவணை (5 ஆண்டுகள்) மட்டும் பிரதமராக இருந்து அடுத்த தலைமுறைத் தலைவரை அடையாளங்கண்டு வழிவிட்டு விலக வேண்டும். நம்பிக்கையுடன் இளையத் தலைமுறையை வளர்த்தெடுக்க வேண்டும்! 

10. கல்வியியல் உருமாற்றம் நாட்டிற்கு மிகத் தேவையான ஒன்றென உணர்ந்து கல்விமுறை சீர்திருத்தம் கொண்டுவர வேண்டும். எல்லாருக்கும் கல்வி என்பதோடு பாகுபாடின்றி கல்வி வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். பாடத்திட்டம் மறுவாய்வுக்கு உட்படுத்தி வேலை சந்தைக்கு ஏற்ப கல்விமுறையும் நம் கிழக்கத்திய பண்பாட்டை வேரூன்றச் செய்யும் தொடக்கக் கல்விமுறையும் அமுல்படுத்த வேண்டும். வாழ்வியல் / பண்பியல் கல்விமுறை உருமாற்றத் தேவையை உணர்ந்து செயலாற்ற வேண்டும்.

மதியழகன் முனியாண்டி
14 நவம்பர் 2022

Saturday, 28 May 2022

பக்காத்தான் ஆட்சியில் கோவில்கள்

1. நமது நாட்டில் இருக்கும் கோவில்கள் குறித்தும் சமய அறிவு குறித்தும் நீண்ட கட்டுரைகள் எழுத வேண்டும் என்று எனக்கு பல நாட்களாக எண்ணம். ஆனால் என் கட்டுரைகள் மிக நீண்ண்ண்ட கட்டுரையாக இருப்பதாகவும் படிப்பதற்கு சிரமமாக இருப்பதாகவும் பலரும் அலுத்துக் கொள்கிறார்கள். ஆகவே நமது நாட்டில் இருக்கும் கோவில்களின் நிலைகளைப் பற்றியும், சமய அறிவு குறித்தும் பகுதி கட்டுரைகளாக எழுதலாம் என்று முடிவெடுத்துள்ளேன். 

2. நமது நாட்டில் கோவில்கள் குறித்த விசாலமான பார்வை நமது இந்தியர்களிடையே துளியும் இல்லை. சமய அறிவும் குறைந்துக் கொண்டே வந்து; தற்போது சுத்தமாக மழுங்கி போய் உள்ளது. சமய அறிவு வளர்க்க வேண்டிய இந்து சங்கம் போன்ற அமைப்புகள் தேவாரப்போட்டி, வேட்டி அழகுராஜா, சேலை அழகு ராணி போட்டி நடத்துவதுதான் சமய அறிவின் உச்சம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

3. இளைஞர்களுக்கு சமய அறிவை புகட்டவும் வளர்க்கவும் வேண்டிய இந்து இளைஞர் அமைப்புகள்; சமய அறிவை வளர்ப்பதைவிட மற்ற அனைத்து வேலைகளையும் செய்கிறார்கள்.

4. நமது நாட்டில் வாழும் இந்துகளுக்கு சமய அறிவு வளர்ப்பதில் ஏற்பட்ட தொய்வினால் பல விரும்பதகாத செயல்களும்; அறிவார்ந்த சமூகமாக உருவாவதில் சிக்கலும் ஏற்பட்டுள்ளது.

5. பொதுவாக நமது நாட்டில் வாழும் தமிழர்களுக்கு கண்மூடித்தனமான பக்தியே மேலோங்கி நிற்கிறது. நம்பிக்கைகள் கொஞ்சம் கொஞ்சமாக மூட நம்பிக்கையாக மாறிவருகிறது. மூட நம்பிக்கைக்கும் பக்திக்கும் வித்தியாசம் தெரியாமல் சிக்கிக் கொண்டோம்.

6. ஆரம்ப காலத்தில் நமது நாட்டில் இரண்டு விதமான கோவில்கள் இருந்தன. ஒன்று, எஸ்டேட் கோவிலக்ள். இரண்டு நகரவாழ் மக்களால் எழுப்பப்பட்ட கோவில்கள். 

7. நாம் பெரும்பாலும் எஸ்டேட்டில் வாழ்ந்த சமூகம் என்பதால் நமது பெருமைமிக்க பல கோவில்கள் எஸ்டேட்டின் எல்லைக்குள் இன்றும் நிலைத்து நிற்கிறது. எஸ்டேட்டில் பொதுவாக மாரியம்மன் கோவில்களும், எல்லையில் காவல் தெய்வமாக முனிஸ்வரன், முனியாண்டி போன்ற அய்யா கோவில்களும், காளியம்மன் கோவில்களும் இருக்கும். இவை தவிர சில புத்து கோவில்கள் இருக்கும். இது மனிதர்களுக்கும் பாம்புக்கும் இருக்கும் உறவை குறிப்பிடுவது.

8. நகரத்தில் பொதுவாக முருகன், சிவன், பெருமாள், விநாயகர் கோவில்கள் இருக்கும். இவைகள் பட்டணத்தில் வசித்த தமிழ்/இந்திய மக்களால் எழுப்பப்பட்டும் நிருவாகிக்கப்பட்டும் வந்தது. 

9. இது தவிர கம்பங்கள் உருவான போது; கம்பத்தில் கோவில்கள் கட்டிக் கொண்டார்கள். பொதுவாக உடைப்படும் கோவில்கள் அனைத்தும் கம்பத்தில் கட்டிக் கொண்ட தற்காலிக கோவில்களாகத்தான் இருக்கும்.

10. எஸ்டேட்டில் இருந்த கோவில்களுக்கு, தமிழ்ப்பள்ளிகள் போல் நிரந்தர இடம் ஒதுக்கி தரப்பட்டது. ஒரு சில எஸ்டேட்டில் மட்டும் வேறு மாதிரியான சூழல்கள் இருந்தது. நாட்டில் 99 விழுக்காட்டு எஸ்டேட் கோவில்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. சில இடம் மாற்றம் நிகழ்ந்தது. சில அதே இடத்தில் தொடர அனுமதி கொடுக்கப்பட்டது.

11. பட்டணத்தில் அமைந்த கோவில்கள் பொதுவாக நல்ல முறையில் பராமரிக்கப்பட்டும்; திறமையான நிருவாகம் இருந்ததாலும் எந்த சிக்கலும் இல்லாமல் இப்போது வரை தொடர்ந்து அதே இடத்தில் இருந்து வருகிறது. சில மேம்பாடு காரணமாக இடம் மாற்றம் செய்யப்பட்டது.

12. கம்பத்தில் குடியேறிய போது கட்டப்பட்ட கோவில்கள்தான் பெரும்பாலும் சிக்கலை ஏற்படுத்தியது. கம்பத்தில் கட்டப்பட்ட கோவில்கள் முறையாக கட்டப்படவில்லை. அதை முறையாக எங்கும் பதிவும் செய்யப்படவில்லை. இந்த கம்பத்து கோவில்களில் மஇகாவினர் புகுந்துக் கொண்டு செய்த அட்டூழியங்கள் கொஞ்சம் நஞ்சம் அல்ல. பல கோவில்களின் நிலங்களை அவர்களே பறித்துக் கொண்டார்கள். அப்படி மஇகாவினால் ஏற்ப்பட்ட சிக்கல்தான் கம்போங் ஜாவா கோவில் பிரச்சனை. அது முழுக்க முழுக்க மஇகா செய்த கோளாறு. 

13. கம்பத்து கோவில்கள் குறித்து தனி நீண்ட கட்டுரை பிறகு எழுதுகிறேன்.

14. 2007-ஆம் ஆண்டுக்கு பிறகு நமக்கு வேறு சில சிக்கல்கள் வந்தது. அது Sdn.Bhd கோவில்கள். 2007-ஆம் ஆண்டில் நடந்த ஹிண்ட்ராப் பேரணியின் முக்கிய அம்சங்களில் ஒன்று கோவில் உடைப்பு. கோவில்கள் உடைப்பின் மீது தமிழ் மக்கள் கொண்ட வெறுப்பு இண்ட்ராப் பேரணியில் எதிரொலித்தது.

15. அதனை தொடர்ந்து 2008-ஆம் நடந்த பொது தேர்தலில் இரு மாநிலங்களில் பக்காத்தான் ஆட்சி அமைத்தது. கடந்த 10 வருட பக்காத்தான் ஆட்சி காலத்தில் சிலாங்கூரிலும் பினாங்கில் புதிது புதிதாக பல கோவில்கள் முளைத்தன. 

16. செடிக் நிதிக்காக NGO-க்கள் உருவானது போல்; பல இடங்களில் கோவில்கள் கட்டிக் கொள்ளப்பட்டது. பக்காத்தான் அரசும் இதை கண்டுக் கொள்ளாமல் அப்படியே விட்டுவிட்டது.

17. இரண்டு விதமாக புது கோவில்கள் உருவானது. ஒன்று புறம்போக்கு, காலியான, யாரும் பயன்படுத்தாத இடங்களில் சில தங்கள் வியாபார வசதிக்காக கோவில்கள் கட்டிக் கொண்டார்கள். அந்த கோவில்களில் பொதுவாக தங்கள் வியாபாரம் சம்பந்தமான பொருட்களையோ அல்லது லாரி போன்றவைகளை நிறுத்தி வைப்பதற்கு பயன்படுத்திக் கொண்டார்கள். இந்த கோவில்களுக்கு ஒரு எஜமானர் இருப்பார். அவரே நாட்டாமையாகவும் இருப்பார்.

18. இன்னொன்று, டாக்சி ஓட்டுபவர்கள், லாரி ஓட்டுபவர்கள் தங்கள் போர்ட்-க்கு பக்கத்தில் இருக்கும் மரத்தின் அடியில் சாமி சிலையை அல்லது படத்தை வைத்து கும்பிட்டு வந்தார்கள். கார் கழுபவர்கள் தங்கள் கார் கழுவும் இடத்துக்கு பக்கத்தில் சீன சாமி மேடை வாங்கி வைத்து, அதில் சாமி படம் வைத்து கும்பிட்டு வந்தார்கள். நாளடைவில் அதை கோவிலாக பிரகடப்படுத்தி திருவிழா, கெடா வெட்டுதல் என அமர்க்களப்படுத்தி விட்டார்கள்.

19. இது போன்ற கோவில்களில் நாலு நம்பர் கேட்கும் வழக்கத்தையும் ஏற்படுத்திக் கொண்டார்கள். பல கோவில்களில் அமாவாசை, பௌர்ணமி, வெள்ளிகிழமை இரவுகளில் நம்பர் கேட்கும் சடங்களும் நடந்து வருகிறது. இதில் யாருக்காவது ஒருவருக்கு நம்பர் அடித்து விடும். உடனே சிமிண்டு போட்டு கல்லு கட்டி கோவிலாக உருவாக்கி விடுவார்கள்.

20. இது போன்ற கோவில்களில் சிலைகள் வைக்கும் முறையும் தெரிந்து வைத்திருக்க மாட்டார்கள். ரத்தம் சொட்ட சொட்ட கையில் மனித தலை, நாக்கு ஏழு முழத்துக்கு வெளியில் வந்து தொங்கிக் கொண்டிருக்கும், கையில் எம் 16 பிஸ்டலை தவிர அத்துனை ஆயுதங்களை வைத்திருக்கும். நமக்கே பார்ப்பதற்கு பயமாக இருக்கும்.

21. இது போன்ற பல கோவில்களில் பீர் போத்தல்கள் கொட்டிக் கிடக்கும். கோவிலில் உட்கார்ந்தே குடித்துக் கொண்டிருப்பார்கள். அப்படி குடித்துக் கொண்டிருக்கும் ஒருவருக்கு சாமி வந்துவிடும்.

22. பக்காத்தான் அட்ட்சியில் கோவில்கள் மீது கை வைக்க கொஞ்சம் பயந்தார்கள். பாரிசான் ஆட்சி காலம் போல் அல்லாமல், பக்காத்தான் ஆட்சியில் கோவில்களை உடைப்பதற்கு கொஞ்சம் யோசித்தார்கள். இது நம்மவர்களுக்கு சாதமாக போய் விட்டது.

23. மூலைக்கு மூலை, மரத்துக்கு மரம், முச்சந்திக்கு முச்சந்தி கோவில்களை கட்டிக் கொண்ட பலரும் அதற்கு ஓனர்கள் ஆனார்கள். அப்படியும் இது போன்ற கோவில்கள் மீது கை வைக்க பக்காத்தான் ஆட்சியில் முயன்ற போது ஆட்களைத் திரட்டிக் கொண்டு வந்து கலாட்டா செய்தார்கள். இவர்களை அடக்கவும் தடுக்கவும் முடியாமல் போய் விட்டது. இதற்கெல்லாம் என்ன முடிவு என்று தெரியாமல் பக்காத்தான் அரசு மட்டும் அல்ல தமிழ் சமய ஆர்வலர்களும் குழம்பிப் போய் உள்ளார்கள்.

24. இந்த சமயத்தில் மனிதவள அமைச்சர் மாண்புமிகு குலசேகரன் நாடு தழுவிய நிலையில் இந்து சமய வாரியம் அமைப்பது குறித்து அலோசனை தெரிவித்திருப்பது கொஞ்சம் நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. 

25. இந்து சமயத்திற்கான அரசாங்க வாரியம் அமையும் போது கோவில்கள் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, இந்த நாட்டில் சமய வளர்ச்சி ஏற்படுவதோடு தமிழர்களின் கௌரவமும் நிலை நிறுத்தப்படும். 

26. புதிது புதிதாக கோவில்கள் உருவாகாது. பிறகு அந்த கோவில்களை உடைக்க வேண்டிய அவசியமும் உருவாகாது. கோவில் நிருவாகங்கள் தனிமனித எஜமான தனத்திலிருந்து விடுப்பட்டு முறையாக நிருவாக குழு அமைவதற்கான சூழல் ஏற்படும்.

27. கோவில்களை முறைகேடாக பயன்படுத்துவதும், சுய தேவைக்கானவும், Sdn Bhd கோவில்களும் தடைசெய்யப்படும். கோவில்கள் ஒரு ஒழுங்கு முறையின் கீழ் இயங்கும் உன்னத நிலை ஏற்படும்.

28. நமது நாட்டில் தமிழ் மக்களின் எண்ணிக்கையைவிட கோவில்கள்தான் அதிகமாக இருக்கிறது. அதைவிட இது போன்ற கோவில்கள் முறையாக பராமரிக்கவும் படுவதில்லை. பல வேளைகளில் பல இன மக்கள் வாழும் நாட்டில்; மற்ற இனங்களின் முன் அவமானம் படும்படியே ஆகிறது. 

29. பீர் பாடிலை முதுகில் குத்திக் கொண்டும், சுருட்டை கடித்து துப்பிக் கொண்டும் நாம் ஆடிக் கொண்டிருப்பது நமது சமூகத்தின் சமூக விழிப்புணர்வை குறித்த கேள்விகளை எழுப்புகிறது.

30. எப்படி யோசித்து பார்த்தாலும் கோவில்களுக்கு வாரியம் அமைப்பது மிக அவசியமானது. காலத்திற்கு உகந்தது. காலத்தின் கட்டாயம். நம் சமூகத்தை நாம் சுய பரிசோதனை செய்துக் கொள்வதற்கு இது அவசியம். இந்து சங்கம் போன்ற அமைப்புகளின் எதிர்ப்பை தூக்கி குப்பையில் போட்டுவிட்டு; சமூதாய வளர்ச்சிக்கும் மறுமலர்ச்சிக்கும் இது போன்ற நடவடிக்கைகள் எடுப்பது மிக அவசியம். அத்தியவாசியம்.

31. கோவில்களுக்கு வாரியம் அமைப்பதை யார் எதிர்ப்பார்கள் என்றால்; கோவில்கள் பெயரை சொல்லி பணம் சம்பாதிப்பவர்கள், கோவில் நிலங்களையும் தளங்களையும் முறைகேடாக பயன்படுத்துபவர்கள், தவறான போதனை செய்கிறவர்கள், நமது தமிழர் பண்பாடு சமய அறிவு இல்லாதவர்கள். இவர்களை அரசாங்கம் கண்டுக் கொள்ளவே கூடாது. இடித்து தள்ளிவிட்டு போய்க் கொண்டே இருக்க வேண்டும்.

32. நமது நாட்டில் இருக்கும் கோவில்களுக்கு வாரியம் அமைவதால் என்ன நன்மைகள் ஏற்படும்? கோவில் உடைப்புகள் ஏன் ஏற்படுகிறது? அளவுக்கு அதிகமான கோவில்களைக் கட்டிக் கொள்வதால் சமய அறிவு வளர்ந்து விடுமா? அதிகமான கோவில்கள் கட்டிக் கொள்வதால் யாருக்கு ஆதாயம்? போன்ற கேள்விகளுக்கு தனி நீண்ட கட்டுரை அடுத்த பகுதியில்.

20 மே 2018

Thursday, 12 May 2022

செடிக் ஊழல்க்கள்

செடிக் ஊழல்க்கள்

இது ஒரு நீண்ட கட்டுரை. பொறுமை இல்லாதவர்கள், அவசரகதியில் இருப்பவர்கள் படிக்க வேண்டாம் என்று சொல்ல மாட்டேன். நேரம் ஒதுக்கி இந்த கட்டுரையை நீங்கள் கண்டிப்பாக படித்து பார்க்க வேண்டும். ஊழல்கள் ஏன் ஒழிக்கப்பட வேண்டும் என்கிற தெளிவான சிந்தனையை பெற வேண்டும்.

1. The Socioeconomic Development of Indian Community Unit என்பதுதான் SEDIC என்பதன் சுருக்கம். தமிழில் மலேசிய இந்திய சமூகப் பொருளாதர மேம்பாட்டுத் திட்ட பிரிவு என்று அழைக்கப்பட்டது. இந்த பிரிவுக்கு பேராசிரியர் என்.எஸ்.ராஜேந்திரன் இயக்குனராக நியமிக்கப்பட்டார். 

2. செடிக் மூலம் இந்திய சமூக பொருளாதர மேம்பாட்டு திட்டங்களை கொண்டு வரப்பட வேண்டும். இதன் மூலம் இந்த சமூகம் பொருளாதர உயர்வு பெற வேண்டும் என்பதே முதன்மை நோக்கம். ஆனால் செடிக் மூலம் இந்திய சமூக பொருளாதரம் உயர்ந்துள்ளதா? அல்லது சமூக பொருளாதர திட்டங்களை எதனையும் அமுல்ப்படுத்தியுள்ளார்களா?

3. செடிக் என்பது முழுக்க முழுக்க பாரிசான் அரசாங்கத்தையும் முன்னாள் பிரதமர் நஜிப்-பையும் ஆதரிக்க அறிமுகம் செய்யப்பட்டது. செடிக்-கின் பங்கு நஜிப்-க்கு ஓட்டு சேகரிக்க வேண்டும். அதையாவது அவர்கள் சரியாக செய்தார்களா? 

4. அரசு சாரா இயக்கங்களுக்கு(NGO) செடிக் மூலம் நிதிகளை கொடுத்து பாரிசானுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய வைத்துள்ளார்கள். செடிக் மூலம் பணம் கிடைக்கிறது என்றவுடன் மஇகா தலைவர்களும், அவர்கள் சார்ந்தவர்களும் புதிய NGO-க்களை பதிவு செய்து மானியங்களை பெற ஆரம்பித்தார்கள். 

5. பாரிசான் அரசாங்கத்தை தொடர்ந்து எதிர்த்து வந்த My Skill Foundation பசுபதி, EWRF நாதன் போன்றவர்கள் தங்களுக்கு தெரிந்த சேனல்கள் மூலம் செடிக்-க்கிடமிருந்து மில்லியன்களில் மான்யம் பெற்றனர். இப்போது பக்காத்தான் ஆட்சிக்கு வந்து விட்டதால், இவர்கள் மீண்டும் பக்காத்தானுக்கு திரும்பலாம். அங்கே இருப்பவர்களுக்கு ஆதரவு கொடுத்து, மீண்டும் தங்களுக்கு தேவையானதை பெற்றுக் கொள்ளலாம்.

6. பாரிசான் ஆதரவாளர்கள் மட்டும் இல்லாமல், பாரிசான் ஆட்சிக்கு எதிராக இருந்த பலரும்கூட செடிக் பிரிவில் மானியத்திற்கு மனுபோட்டார்கள். பாரிசானை ஆதரிக்க வேண்டும்; நஜிப்-க்கு பிரச்சாரம் செய்ய வேண்டும் என்கிற கட்டாய கட்டளையோடு மானியம் ஒதுக்கிக் கொடுக்கப்பட்டது.

7. செடிக் மூலம் பணத்தை வாங்கிக் கொண்ட இந்திய சமூக இயக்கங்கள் இரண்டு விதமான கொள்கையை கடைப்பிடித்தனர். ஒரு சாரார் பாரிசானுக்கும் நஜிப்புக்கும் ஆதரவாக செயல்ப்பட தொடங்கினர். இன்னொரு சாரார் பாரிசானை எதிர்க்காமல் அடங்கி போனார்கள்.

8. பணத்துக்காக சோரம் போகும் இனம் நம்மினம் என்று மீண்டும் நிரூப்பிக்கப்பட்டது. இந்திய சமூகத்தை பணம் கொடுத்து வாங்கி விடலாம் என்கிற அம்னோவின் எண்ணம் அப்படியே நடந்தது. செடிக் மூலம் பணத்தை வாங்கிக் கொண்டு பாரிசானுக்கும் நஜிப்-க்கும் ஆதரவாக செயல்பட ஆரம்பித்த்னர்.

9. வெளியில் இருந்து பார்க்கும் போது; இந்திய சமூகம் முழுக்க நஜிப்பின் பாரிசான் அரசாங்கத்தை ஆதரிப்பது போல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தினார்கள். இந்திய சமூகம் 100 விழுக்காடு பாரிசானுக்கு ஆதரவாக இருப்பது போல் மாயையை உருவாக்கினார்கள்.

10. இந்த மாய தோற்றத்தை பார்த்த துன் மகாதீர், ஆரம்பத்தில் இந்திய சமூகம் பாரிசானுக்கு ஆதரவாக இருப்பது போல் உணர்ந்தார். ஆகவே இந்தியர்களின் ஆதரவை துன் மகாதீர் பெரிதும் எதிர்ப்பார்க்கவில்லை. ஒரு கட்டத்தில் சுதாரித்துக் கொண்ட துன் மகாதீர் ஹிண்ட்ராப் அணியை பக்காதானுக்கு ஆதரவாக உள்ளிழுத்துக் கொண்டார். 

11. மஇகாகாரர்களும், அவர்கள் சார்ந்த இயக்கங்கள் இந்தியர்களின் ஓட்டு பாரிசானுக்குதான் விழும் என்று கணக்கு காட்டி நஜிப்-ப்பை ஏமாற்றினார்கள். என்.எஸ்.ராஜேந்திரனின் கணக்கைப் பார்த்து ஏமாந்து போன நஜிப் மேலும் இன்னும் அதிகமான மில்லியன்களை கொடுத்தார். இந்த காலகட்டத்தில் மஇகா தலைவர்கள் அனைவரும், MIVA,NAAM,Power Malaysia போன்று ஆளுக்கொரு NGO திறந்துக் கொண்டு பணத்தை சுருட்ட ஆரம்பித்தார்கள். இவர்களுக்கு ராஜேந்திரனும் துணை போனார்.

12. பணம் வந்ததும் என்.எஸ்.ராஜேந்திரனுக்கு போதை வந்தது. செனட்டர், அமைச்சர் பதவி மீது கண் விழுந்தது. இந்த தேர்தலுக்கு பிறகு அமைச்சர் ஆகிவிட வேண்டும் என்று காய்களை நகர்த்த தொடங்கினார்.

13. செடிக் மூலம் நிதி வழங்கப்பட்ட NGO நிகழ்ச்சிகளில் நஜிப் படத்திற்கு இணையாக தன்னுடைய படமும் போட வேண்டும் என்று கட்டாயப்படுத்தினார். மேடையில் புகழ்ந்து பேச வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

14. பணத்துக்காக மட்டுமே NGO ஆரம்பித்த சமூக இயக்கங்களும், சமூக தலைவர்களும் என்.எஸ்.ராஜேந்திரனை புகழ்ந்து பேச ஆரம்பித்தார்கள். ஊரில் உள்ள பல நல்லவர்களும் செடிக் மூலம் நிதியை வாங்கிக் கொண்டு பாரிசானையும், நஜிப்பையும், என்.எஸ்.ராஜேந்திரனையும் புகழ்ந்து பேச தொடங்கினார்கள். பார்ப்பதற்கே ரொம்பவும் அசிங்கமாக இருந்தது.

15. பாரிசானையும் ராஜேந்திரனையும் ஆதரிக்காதவர்களுக்கு செடிக் மூலம் மானியம் கொடுக்கப்படவில்லை. அல்லது கொடுக்கப்பட்ட மானியம் நிறுத்தப்பட்டது.

16. அனைத்து மலேசிய தமிழ்ப்பள்ளிகளின் முன்னாள் மாணவர்கள் சங்கங்களின் பேரவை ஆண்டு கூட்டத்தில் அதன் தலைவர் ராஜரத்தினம், ‘முன்பு இருந்த பிரதமர்(மகாதீர்) கிள்ளி கொடுத்தார், தற்போதைய பிரதமர்(நஜிப்) அள்ளி கொடுக்கிறார்கள். நாம் இந்த பிரதமருக்கு விசுவாசமாக இருக்க வேண்டும்’ என்று பேசினார். முதல் ஆண்டு 80 ஆயிரம் வெள்ளியும், மறு ஆண்டு ஒரு லட்சத்துக்கும் மேல் கொடுக்கப்பட்டது. கொடுத்த காசுக்கும் மேல் கூவினார்கள்.

17. வாட்சாப் மூலம் தினமும் காலையில் Good Morning வாழ்த்து அனுப்புவதற்கு 2 லட்சத்துக்கும் மேல் ஒரு NGO-க்கு ஒதுக்கி கொடுத்தார் ராஜேந்திரன். வாட்சாப்-இல் வாழ்த்து அனுப்புவது சமூக பொருளாதர மேம்பாட்டு திட்டம்.

18. 2016-ம் ஆண்டு தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு என்கிற இயக்கம் ஆரம்பித்தார்கள். அதற்கு 10 மில்லியன் ரிங்கிட் பணம் செடிக் மூலம் கொடுப்பட்டது. டிசம்பர் மாதத்தில் இந்த பிரச்சாரத்தை ஆரம்பித்தார்கள். ஆனால் அதற்கு முன்பே தங்கள் குழந்தைகளை பள்ளியில் பதிந்திருப்பார்கள். இவர்கள் யாருக்காக இந்த பிரச்சாரததை செய்தார்கள் என்று தெரியவில்லை.

19. 10 லட்சம் வெள்ளி செலவு செய்து, அந்த ஆண்டு 130 மாணவர்கள்தான் தேசிய நிலையில் தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு என்பது நமது உணர்வு. அதை தமிழ்ப்பள்ளியில் நின்று கூவிக் கொண்டிருக்க கூடாது. மலாய் பள்ளி வாசல்களிலும், வீடமைப்பு பகுதிகளுக்கும் போய் அந்த உணர்வை தூண்டிருக்க வேண்டும். 

20. ஏற்கனவே தமிழ்ப்பள்ளியில் தங்கள் குழந்தையை பதிந்தவர்களின் பெற்றோர்கள்தாம் தமிழ்ப்பள்ளிக்கு வருவார்கள். அங்கே நின்று கொண்டு, தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு என்று பேனர்களும், போஸ்டர்களும், அறிக்கையும் கொடுத்துக் கொண்டிருந்தால் யாருக்கு என்ன நன்மை. 10 மில்லியனை நாசம் செய்தார்கள். இதற்கு ராஜேந்திரனும் உடந்தை.

21. செடிக் வைத்துக் கொண்டு இவர்கள் சேவை செய்யவில்லை. சமூக பொருளாதர மேம்பாட்டை கொண்டு வரவில்லை. மாறாக இவர்களின் பொருளாதர மேம்பாட்டை சரிவர செய்துக் கொண்டார்கள். 

22. செடிக் மூலம் பணத்தை காட்டி பாரிசானுக்கும் நஜிப்புக்கும் ஓட்டு சேர்ந்தார்கள். ஆனால் நடந்த முடிந்த 14-வது தேர்தலில் எதுவும் பலிக்கவில்லை. மலேசிய இந்தியர்கள் ஒரு தெளிவான முடிவு எடுத்தார்கள். 80 விழுக்காட்டுக்கும் அதிகமான இந்தியர்களின் ஓட்டு பக்காத்தானுக்கு விழுந்தது. 

23. தன்மானம், சமூக உணர்வு, வெட்கம் இல்லாதவர்கள் செடிக் மூலம் பணத்தை வாங்கிக் கொண்டு முன்னாள் ஆளும் கட்சியான பாரிசனுக்கும் நஜிப்புக்கும் வாலை ஆட்டிக் கொண்டிருந்திருக்கலாம். ஆனால் தமிழர்கள் தன்மானம் உள்ளவர்கள். பணத்தால் தங்களை விலைக்கு வாங்க முடியாது என்பதை நிருப்பித்துள்ளார்கள்.

24. வேசம் போடும் சில/பல நல்லவர்களை இந்த செடிக் அடையாளம் காட்டியுள்ளது.

25. The Socioeconomic Development of Indian Community Unit(SEDIC)/மலேசிய இந்திய சமூகப் பொருளாதர மேம்பாட்டுத் திட்ட பிரிவுவில்(செடிக்) பல முறைகேடுகளும் அதிகார மீறல்களும் நடந்துள்ளது. முறையாக விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட வேண்டும்.

25. இது மாற்றத்தை விருப்பும் அடுத்த தலைமுறையினருக்கு புது உத்வேகத்தையும், தன்நம்பிக்கையும் கொடுக்கும். யாரையும் காக்கா பிடித்து வாழ வேண்டிய அவசியம் இல்லை என்கிற தன்முனைப்பு அவர்களுக்கு கிடைக்கும்.

26. ஏமாற்றியும் ஊழல் செய்தும் பிழைப்பது அறம் இல்லை என்பது நம் அடுத்த தலைமுறையினருக்கு கற்று தரவேண்டும். ஊழல் இல்லாத சமூகம் உருவாக்க வேண்டும் என்றால் ராஜேந்திரன் போன்ற அதிகாரிகளும்; சரவணன், டி.மோகன், விக்னேஸ்வரன் போன்ற மஇகா தலைவர்களும் தண்டிக்கப்பட வேண்டும். ஊழல்வாதிகள் தண்டிக்கப்படுவார்கள் என்பதனை நம் அடுத்த தலைமுறையினர் மனதில் ஆழமாக பதிய வைக்க வேண்டும்.

27. ஊழல் பணத்தில் வாழ்வது மகா குற்றம் என்று அவர்களுக்கு தெளிவு படுத்த வேண்டும். புதிய சமூக உருமாற்றத்திற்கு தயாராவோம். நேர்மையாக உழைக்கும் சமூகத்தை உருவாக்குவேம். அடுத்த தலைமுறைக்கு நாம் உதாரணமாக இருப்போம்.

28. ஊழல் மீது நடவடிக்கை எடுப்பது, பழிவாங்கும் செயல் அல்ல. அவர்கள் செய்த தவறுக்களுக்கு கொடுப்படும் தண்டனை. அடுத்த தலைமுறையினருக்கு கற்று கொடுக்கும் பாடம். 

29. ஊழல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால், நமது சமூகத்தின் அடுத்த தலைமுறையினர் பெறும் வீழ்ச்சி அடைவார்கள். ஊழல் என்பது ஒரு பண்பாட்டு கூறு, பணம் சம்பாதிப்பதற்கான வழிகளில் ஊழலும் ஒன்று என்பது அவர்களின் மனதில் நிலைநிறுப்பத்தபடும்.

30. ஊழல் செய்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள். ஊழல் சமூககேடு என்பதனை உணர்த்தவும், ஊழல் சமூக வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கும் என்பதனையும் அடுத்த தலைமுறையினருக்கு நாம் புரியவைக்க வேண்டும். 

31. செடிக் முறைகேடுகள் விசாரிக்கப்பட வேண்டும். பக்காத்தான் மற்றும் பாரிசான் கட்சியில் இருக்கும் இந்திய அரசியல் தலைவர்களுக்கு இது பாடமாக இருக்க வேண்டும். இந்திய நலன் சார்ந்த அரசாங்க அதிகாரிகள் இனியும் நேர்மையாக இருக்க வேண்டும். 

32. பணத்துக்கு விலை போகும் இனம் தமிழினம் இல்லை என்பது அடையாளப்படுத்த வேண்டும். இந்த நாட்டில் வாழும் மற்ற இனத்திற்கு முன் நாமும் தன்மானமாக, நெஞ்சு உயர்த்தி நடை போட வேண்டும்.

13 மே 2018

About Me

My photo
Novelist, Independent Film Maker

Contact form

Name

Email *

Message *

Total Pageviews